

டேராடூன்: கும்பமேளா நாட்களில் ஹரித்வாரில் கங்கை நதியின் 105 படித்துறைகளில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிப்பது குறித்து உத்தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது.
ஹரித்துவாரின் முக்கிய ஹர்-கி-பாரி படித்துறை பராமரிப்பை கண்காணித்து வரும் கங்கா சபை மற்றும் சில துறவிகளின் கோரிக்கையை தொடர்ந்து அதனை உத்தராகண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் கும்பமேளா நாட்களில் 105 படித்துறைகளில் இந்து அல்லாதோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபையின் கோரிக்கைக்கு ஹரித்வாரில் வசிக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தடை செய்வது சாத்தியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று வழக்கறிஞர் சுதான்ஷு திவேதி கூறினார். நீர்மின்துறையின் முன்னாள் நிர்வாகப் பொறியாளர் ராகேஷ் சந்திரா கூறுகையில், “நமது மதத்தின் தாராளவாத பிம்பத்தை இந்தப் பாகுபாடு கடுமையாக பாதிக்கும்” என்றார். இது தவிர, ரிஷி கேஷ், ஹரித்வார் ஆகிய நகரங்களை ‘சனா தன புனித நகரங்கள்’ என்று அறிவிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.