

கன்னூர்: கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் கடயத்தூரைச் சேர்ந்த பத்மராஜன் (48) அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு 4-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலசேரி விரைவு சிறப்பு நீதிமன்றம், பத்மராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.இந்நிலையில், பத்மராஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் வி.சிவன் குட்டி நேற்று தெரிவித்தார்.