காஷ்மீர் பெண் தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்

இருவருக்கு தலா 30 ஆண்டு சிறை தண்டனை
ஆசியா அன்ட்​ராபி

ஆசியா அன்ட்​ராபி

Updated on
1 min read

புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த பெண் தீவிர​வாதி ஆசியா அன்ட்​ராபிக்கு டெல்லி நீதி​மன்​றம் நேற்று ஆயுள் தண்​டனை விதித்​தது. அவரது இரு கூட்​டாளி​களுக்கு தலா 30 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்​தவர் ஆசியா அன்ட்​ராபி (62). அவர் ஆரம்​பத்​தில் ஜமாத் இ இஸ்​லாமி என்ற அமைப்​பில் இருந்​தார். அதில் இருந்து வில​கிய அவர் கடந்த 1980ல் துக்​தரன் இ மில்​லத் என்ற புதிய அமைப்பை தொடங்​கி​னார்.

கடந்த 1990ல் ஹிஸ்​புல் முஜாகிதீன் தீவிர​வாத அமைப்​பின் மூத்த தலை​வர் ஆசிக் ஹுசைன் பக்​தூவை அவர் திரு​மணம் செய்​தார். கொலை வழக்கு தொடர்​பாக கடந்த 1992 முதல் பக்​தூவ் சிறை​யில் உள்​ளார்.

இந்​தி​யா​வில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்​டும் என்ற கொள்கையை வலி​யுறுத்தி பல்​வேறு போராட்​டங்​களை ஆசியா அன்ட்​ராபி நடத்தி வந்​தார். காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் பாகிஸ்​தான் தேசிய கொடியை ஏற்​றி, தொடர்ச்​சி​யாக தேச​விரோத செயல்​களில் ஈடு​பட்​டார்.

பாகிஸ்​தானை சேர்ந்த தீவிரவாத குழுக்​களு​டன் அவர் நெருங்​கிய தொடர்​பில் இருந்​தார். இந்​தி​யா​வுக்கு எதி​ரான பல்​வேறு சதித் திட்​டங்​களில் அவருக்கு தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

பொது அமை​தியை சீர்​குலைத்​த​தாக கடந்த 1993ம் ஆண்​டில் அவர் முதல்​முறை​யாக கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் பல்​வேறு வழக்​கு​களில் அவர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டார். அவ்வப்போது ஜாமீனில் விடு​தலை​யா​னார்.

இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்​ரலில் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் ஆசியா அன்ட்​ராபி​யும் அவரது கூட்​டாளி​கள் சோபி பெமி​தா, நகிதா நஸ்​ரின் ஆகியோரும் கைது செய்​யப்​பட்​டனர்.

டெல்லி கூடு​தல் செஷன்ஸ் நீதிபதி சந்​தர் ஜித் சிங் வழக்கை விசா​ரித்து கடந்த ஜனவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்​கி​னார். அப்​போது 3 பேரும் குற்​ற​வாளி​கள் என்று அவர் தீர்ப்​பளித்​தார்.

<div class="paragraphs"><p>ஆசியா அன்ட்​ராபி</p></div>
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in