ஈரான் தலைவர் காமேனிக்கு காஷ்மீரின் ஷியா இஸ்லாமியர்கள் ஆதரவு; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு

ஈரான் தலைவர் காமேனிக்கு காஷ்மீரின் ஷியா இஸ்லாமியர்கள் ஆதரவு; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பட்காம் உள்ளிட்ட நகரங்களில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வீதிகளில் குழுமி கோஷம் எழுப்பினர். இதேபோல நேற்றைய தினம் லடாக்கில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தங்களது கண்டனத்தை அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அயத்துல்லா அலி காமேனியின் படம் மற்றும் ஈரானுக்கு ஆதரவான பதாகைகளை தங்கள் வசம் கொண்டிருந்தனர். இதில் சில இடங்களில் பேரணியும் சென்றனர்.

ஈரானிய மக்களுடன் தங்களுக்கு உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஈரானின் ஷியா தலைமைத்துவத்துடன் தங்களுக்கு உள்ள சித்தாந்த மற்றும் மதப் பிணைப்புகளை உறுதி செய்யவுமே இந்த ஆர்ப்பாட்டம் என காஷ்மீர் மக்கள் தெரிவித்தனர்.

பற்றி எரியும் ஈரான்: அமெரிக்கா உடனான மோதல் காரண​மாக ஈரான் மீது பல்​வேறு நாடு​கள் பொருளா​தார தடைகளை விதித்​துள்​ளன. இதன்​ காரண​மாக ஈரானில் அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை 72 சதவீதம் வரை உயர்ந்​திருக்​கிறது. மருந்​துகளின் விலை 50 சதவீதம் வரை அதி​கரித்​திருக்​கிறது. சுமார் 24 சதவீத இளைஞர்​கள் வேலை​வாய்ப்​பின்றி பரி​தவித்து வரு​கின்​றனர். மக்​கள் மீதான வரிச்​சுமை 62 சதவீத​மாக அதி​கரித்​திருக்​கிறது. கடுமை​யான பொருளா​தார நெருக்​கடி​யில் ஈரான் சிக்​கித் தவித்து வரு​கிறது.

இந்தச் சூழலில் ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த மாதம் 28-ம் தேதி தலைநகர் தெஹ்​ரானில் மிகப்​பெரிய போராட்​டம் வெடித்​தது. ஜென் இசட் இளைஞர்​கள் தலைநகரில் திரண்டு மதத் தலை​வர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்​கி​யான் பதவி விலக கோஷமிட்​டனர். அந்த நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் தலைவர் காமேனிக்கு காஷ்மீரின் ஷியா இஸ்லாமியர்கள் ஆதரவு; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
“ஸ்டெயினின் ஆக்ரோஷம் எனக்கு பிடிக்கும்” - இந்திய பவுலர் ஹெனில் படேல் பகிர்வு | U19 World Cup

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in