வாசனை திரவியம் மையமாக மாறியது காஷ்மீர்: அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்

வாசனை திரவியம் மையமாக மாறியது காஷ்மீர்: அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 4-ம் ஆண்டு லாவெண்​டர் திருவிழா நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்ற மத்​திய அமைச்சர் ஜிதேந்​திர சிங் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: காஷ்மீரில் 10 ஆண்​டு​களுக்கு முன்பு லாவெண்டர் பூ விவசாயத்தை தொடங்கிய ​போது, இதில் பங்​கெடுக்க மக்​கள் முன்​வர​வில்​லை. இத்​திட்​டம் பலன் அளிக்​க​வில்லை என்​றால் நிலங்​களை திருப்​பித்​தரு​வ​தாக உறு​தி​யளித்​தோம்.

தற்​போது இங்கு லாவெண்​டர் பூ சாகுபடி மூலம் விவ​சா​யிகள் நல்ல வரு​மானம் ஈட்டி வரு​கின்​றனர். ஏற்றுமதியும் செய்கின்றனர். 12-ம் வகுப்​பைக் கூட முடிக்​காதவர்​கள் எல்​லாம் தற்​போது லாவெண்​டர் ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை தொடங்​கி​யுள்​ளனர். லாவெண்​டர் பூ சாகுபடி மற்​றும் வாசனை திர​வி​ய உற்​பத்​தி​யின் தேசிய மைய​மாக காஷ்மீர் மாறி​யுள்​ளது. இவ்​​வாறு அமைச்​சர்​ ஜிதேந்​திர சிங்​ கூறி​னார்​.

வாசனை திரவியம் மையமாக மாறியது காஷ்மீர்: அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்
செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி: இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in