நவம்பர் 28-ல் காசி தமிழ் சங்கமம் இணையதள முன்பதிவு தொடக்​கம்

நவம்பர் 28-ல் காசி தமிழ் சங்கமம் இணையதள முன்பதிவு தொடக்​கம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் யோசனை​யால், உத்தர பிரதேசம் வாராணசி​யில் கடந்த 2022-ல் காசி தமிழ் சங்கமம் முதன்​முதலில் தொடங்​கப்​பட்​டது.

இது​வரை நான்கு சங்​கமங்​கள் நடை​பெற்​றுள்​ளன. இவற்​றின் மூலம், வாராணசி மற்​றும் தமிழ்​நாட்​டுக்கு இடையே அறி​வு, மொழி, மரபு​கள் மற்​றும் வாழ்க்கை அனுபவங்​கள் குறித்த அர்த்​த​முள்ள பரி​மாற்​றங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. காசி தமிழ் சங்​கமத்​தின் ஐந்​தாவது நிகழ்வு (கேடிஒ-5.0) வரும் நவம்​பர் 28-ல் தொடங்கி டிசம்​பர் 12 வரை நடை​பெறுகிறது.

இந்த நிகழ்வை மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் உயர்​கல்​வித் துறை, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம் (பிஎச்யூ), சென்​னை​யில் உள்ள செம்​மொழித் தமிழாய்வு மத்​திய நிறு​வனம்​(சிஐசிடி) ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன. மேலும் இவர்​களு​டன், உ.பி. அரசு மற்​றும் மத்​திய அரசின் கலாச்​சா​ரம், ரயில்​வே உள்​ளிட்ட பல்​வேறு அமைச்​சகங்​களும் இணைந்து செயல்​படு​கின்​றன.

நடப்​பாண்​டின் கேடிஓ-5.0 க்கான கருப்​பொருளாக ‘திருக்​குறள் பயில்​வோம்’ என்​பது தேர்​வாகி உள்​ளது. இதில் கலந்து கொள்​வதற்​கான இணை​யதள முன்​ப​திவை மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் பிரஹலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்த இணயதளப் பதிவு நவம்​பர் 13 அன்று முடிகிறது. ஆர்​வ​முள்ளவர்கள், சென்னை ஐஐடி நிர்​வகிக்​கும் https://kashitamil.iitm.ac.in/ என்ற அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தின் வாயி​லாக விண்​ணப்​பிக்க வேண்​டும். இதில் கலந்​து​கொள்ள தமிழகத்​திலிருந்து வரு​வோர் பிர​யாக்​ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.

நவம்பர் 28-ல் காசி தமிழ் சங்கமம் இணையதள முன்பதிவு தொடக்​கம்
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in