மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த 30 பேர் குழு: கர்நாடக அரசு அமைத்தது

மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த 30 பேர் குழு: கர்நாடக அரசு அமைத்தது
Updated on
1 min read

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்​கான திட்​ட​வரைவு அறிக்​கையை மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சகத்​தில் தாக்​கல் செய்​தது. இதற்கு தமிழகம், கேரளா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தன. இந்த திட்​ட​வரைவு அறிக்​கைக்கு எதி​ரான தமிழக அரசின் மனுவை உச்ச நீதி​மன்​றம் கடந்த மாதம் தள்​ளு​படி செய்​தது.

இதையடுத்து விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கும் பணி​யில் கர்​நாடக அரசு இறங்​கி​யுள்​ளது. இதற்​காக நீர்​வளத்​துறை தலைமை பொறி​யாளர் தலை​மை​யில் 5 பேர் கொண்ட குழுவை ஏற்​கெனவே அமைத்​துள்​ளது.

இந்​நிலை​யில் மேகே​தாட்டு திட்​டத்தை வெற்​றிகர​மாக செயல்​படுத்த 30 நிபுணர்​கள் கொண்ட குழுவை அமைத்து கர்​நாடக அரசு நேற்று உத்​தர​விட்​டுள்​ளது.

அந்த உத்​தர​வில், “கா​விரி நீர்ப்​பாசன கழக இயக்​குநரின் கீழ் இந்த நிபுணர் குழு செயல்​படும். இதன் அலு​வல​கம் பெங்​களூரு தெற்கு மாவட்​டம், ராமநக​ரா​வில் செயல்​படும். அங்கு பிரத்​யே​கமாக‌ மேகே​தாட்டு திட்ட அலு​வல​கம் நிறு​வப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த 30 பேர் குழு: கர்நாடக அரசு அமைத்தது
தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: மக்களவையில் பாஜக எம்.பி. அனு​ராக் தாக்குர் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in