உ.பி.யில் உயிருடன் இருந்தவர் பெயரில் உடற்கூறாய்வு: மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்

உ.பி.யில் உயிருடன் இருந்தவர் பெயரில் உடற்கூறாய்வு: மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூர் ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்​கூ​ராய்​வு அறிக்கை அனுப்​பிய சம்​பவத்​தில் மருத்​து​வர் உள்​ளிட்ட மூவர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கான்​பூரில் பிரபல ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி​யில் ஹாலெட் மருத்​து​வ​மனை செயல்​படு​கிறது. இங்கு ஓர் அதிர்ச்​சி​யூட்​டும் சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. வார்டு எண் 12-ல் உள்ள படுக்கை எண் 42-ல் ஒரு அடை​யாளம் தெரி​யாத நபர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தார். சிகிச்சை பலனின்றி அந்த நபர் கடந்த சனிக்​கிழமை உயி​ரிழந்​தார். இவரது உடலை கூறாய்வு செய்து காவல்​ துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டி இருந்​தது.

இந்​நிலை​யில், அந்த நபரின் உடலை உடற்​கூ​றாய்வு ஆய்​வறிக்​கைக்கு பதிலாக அரு​கி​லிருந்த படுக்கை எண் 43 -ல் இருந்​தவரின் பெயரில் அறிக்கை அனுப்பி உள்​ளனர்.

படுக்கை எண் 43-ல் சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தவர் வினோத்​ கு​மார். இவர் இறந்​து​போனவருக்கு ஒத்த வயதுள்​ளவர். இவரும் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் சிகிச்சை பெற்று வந்​தவர். வினோத்​கு​மார், உயிருடன் இருந்​த​போதே இறந்​து​விட்​ட​தாக அறிவிக்​கப்​பட்​டு, அவருக்கு உடற்​கூறாய்வு செய்து காவல்​துறைக்கு அறிக்கை அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அப்​போது, பணி​யில் இருந்த ஒரு மருத்​து​வர் மற்​றும் 2 ஊழியர்​களின் அவசரத்​தால் இந்​தத் தவறு நிகழ்ந்​துள்​ளது. இந்த சம்​பவத்தை அறிந்த துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்டார். இதைத் தொடர்ந்​து, மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் டாக்​டர் சஞ்​சய் கலா, உடனடி​யாக இளநிலை மருத்து​வர் ஹிமான்ஷு மவுரி​யா, செவிலியர் சன்னி சோன்​கர் மற்​றும் வார்டு உதவி​யாளர் ரஹ்னுமா ஆகியோரை பணி​யிடைநீக்​கம்​ செய்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in