காங்கிரஸில் திரிணமூல் இணைப்பா? - மூத்த எம்.பி கல்யாண் பானர்ஜி விளக்கம்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து அக்கட்சியின் மூத்த எம்.பி கல்யாண் பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியடைந்த படுதோல்வியை அடுத்து அக்கட்சிக்குள் குழப்பங்கள் மிகுந்து கொண்டிருக்கு, அதை தாய்க்கழகமான காங்கிரஸுடன் இணைக்கும் திட்டம் இருப்பதாக சலசலப்புகள் உருவாகின.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதில்லை என்று கட்சியின் மூத்த எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், “திரிணமூல் அதிருப்தி எம்.பிக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் விரும்பியதைச் செய்து இனி பாஜகவின் நிழலில்கூட வாழட்டும். தத்தம் தொகுதி மேம்பாட்டுக்காக இந்த முடிவை எடுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், தங்கள் தொகுதிகளுக்கே முழுமையாகச் செல்லாதவர்கள்தான் அவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். இனி என்ன வளர்ச்சியை தொகுதிக்கு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர். ஒரு மாதத்தில் என்ன நடந்திருக்கிறது என்றும் தெரியவில்லை. இனி என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை. நாங்கள் இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடியைப் போல் இதற்கு முன்னர் எந்தவொரு எதிர்க்கட்சியும் நெருக்கடியை சந்திக்கவில்லை.

பாஜக மட்டுமல்ல, மேற்கு வங்க மக்களுமே இப்போது எங்களை ஒடுக்குகிறார்கள். இங்கிருந்து செல்லும் 19 எம்.பி.க்களை பாஜக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.” என்றார்.

இதற்கு முன்பு திரிணமூல் எம்.பி. கீர்த்தி ஆசாத்தும் காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் இணைக்கப்படும் என்ற செய்திகளை தவறான தகவல் என்று மறுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, ஜூன் 11 அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி.வேணுகோபால் அளித்த பேட்டியிலும், திரிணமூல் காங்கிரஸுடன் இணைக்கிறார்கள் என்பது அடிப்படை ஆதாரமற்ற புரளி என்று கூறியிருந்தார்.

<div class="paragraphs"><p>திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி </p></div>
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in