

புதுடெல்லி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) பணிநீக்கம் செய்துள்ளது.
பல்கலைக்கழக உள் புகார்க் குழு அவர் தவறு செய்தவர் எனக் கண்டறிந்து கடுமையான தண்டனையைப் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், அகோய்ஜாம் மீது 11 மாணவிகள் பல்கலைக்கழக உள் புகார்க் குழுவிடம் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை, உள்நோக்கம் கொண்டவை என்று அகோய் ஜாம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.