ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானையால் 23 பேர் உயிரிழப்பு: தமிழ்நாட்டு கும்கிகளை வரவழைக்க முடிவு

மாதிரி படம்

மாதிரி படம்

Updated on
1 min read

புதுடெல்லி: வனப்​பிரதேசம் நிறைந்த ஜார்க்​கண்​டில் யானை​கள் நடமாட்​டம் அதி​கம் உள்​ளது. மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் ஒரு முரட்டு யானை 2 வாரங்​களில் 23 பேரை கொன்​றுள்​ளது.

இந்த விவ​காரம் நேற்று ஜார்க்​கண்ட் சட்​டப்​பேர​வை​யில் எழுப்​பப்​பட்​டது. இதில் காங்​கிரஸ் எம்​எல்ஏ ராமேஸ்​வர் ஓரான் பேசுகை​யில், “யானை​களின் அச்​சுறுத்​தலை சமாளிக்க அரசு கொள்​கை​யில் மாற்​றம் கொண்டு வர வேண்​டும். யானை மற்​றும் மனித மோதலைக் குறைக்க பயனுள்ள நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். காட்டு யானை​யால் ஏற்​படும் உயி​ரிழப்​புக்கு ரூ.4 லட்​சம் வழங்​கப்​படு​கிறது. இதை, ஒடிசா போன்று ரூ.6 லட்​ச​மாக உயர்த்த வேண்​டும்” என்​றார்.

இதற்கு முதல்​வர் ஹேமந்த் சோரன் பேசுகை​யில் “ஜார்க்​கண்​டில் யானை - மனித மோதல் கடுமை​யான சமூக மற்​றும் சுற்​றுச்​சூழல் நெருக்​கடி​யாக மாறி​யுள்​ளது. யானை நடத்​தை​யில் ஏற்​படும் மாற்​றத்​துக்கு சுற்​றுச்​சூழல் மாற்​றங்​கள் ஒரு முக்​கிய காரண​மாக உள்​ளது. அரசு முழு பிரச்​சினையை​யும் கவனித்து வரு​கிறது.

மாநிலத்​தில் பயிற்சி பெற்ற மீட்​புக் குழு தற்​போது இல்​லை. இந்​தக் குறை விரை​வில் தீர்க்​கப்​படும். தமிழ்​நாட்​டில் இருந்து 6 கும்கி யானை​கள் அழைத்து வரப்பட உள்​ளன. இவை முரட்டு காட்டு யானை​களை கட்​டுப்​படுத்​த பயன்​படுத்​தப்​படும்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>மாதிரி படம்</p></div>
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in