“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விரைவில் முடிவு” - மத்திய அமைச்சர் மேக்வால் தகவல்

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விரைவில் முடிவு” - மத்திய அமைச்சர் மேக்வால் தகவல்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான முடிவு மிக விரைவில் எடுக்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

சட்ட சேவைகளில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது தொடர்பான கருத்தரங்கம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில், மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுடன் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் ராம் மேக்வால், ‘‘ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவு என்பது மிகவும் உணர்திறன் வாய்ந்தது.

அதேநேரத்தில், இவ்விஷயத்தில் உரிய முடிவை விரைந்து எடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் அவர்களுக்கு உரியதை பெறுவார்கள் என்று தெரிவித்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’’ என தெரிவித்தார்.

அர்ஜுன் ராம் மேக்வாலின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய உமர் அப்துல்லா, ‘‘ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மாநில அரசு மத்திய அரசுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த செயல்முறை எதிர்பார்த்ததைவிட அதிக காலதாமதம் ஆகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒன்றரை ஆண்டுகளாக நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள். தற்போது மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கு ஏற்ப விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என தெரிவித்தார்.

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து விரைவில் முடிவு” - மத்திய அமைச்சர் மேக்வால் தகவல்
பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சுவார்த்தை - ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in