பிஹார் மாநிலத்தில் 8,937 நீர்நிலைகள் காணவில்லை: ஜல் சக்தி அமைச்சக ஆய்வில் தகவல்

பிஹார் மாநிலத்தில் 8,937 நீர்நிலைகள் காணவில்லை: ஜல் சக்தி அமைச்சக ஆய்வில் தகவல்
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் சுமார் 8,937 நீர்​நிலைகள் காணாமல் போய் உள்​ள​தாக ஒரு ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

அசாம், பிஹார், டெல்​லி, லடாக் மற்​றும் சிக்​கிம் ஆகிய மாநிலங்களில் மத்​திய ஜல் சக்தி அமைச்​சகம் சார்​பில் கடந்த ஆண்டு 2-வது நீர்​நிலைகள் பற்​றிய கணக்​கெடுப்பு நடத்தப்பட்டது. 2018- 19ம் ஆண்​டில் பிஹாரில் பதி​வாகி இருந்த 45,793 நீர்​நிலைகளில், 36,856 மட்​டுமே இன்​னும் மிஞ்​சி​யிருப்​பது இந்த கணக்​கெடுப்​பில் தெரிய​வந்​துள்​ளது. அதாவது 8,937 நீர்நிலைகள் காணா​மல் போய் உள்​ளன.

இந்​தக் கணக்​கெடுப்​பின்​படி, இந்த நீர்​நிலைகளில் 45% பிஹார் அரசுக்கு சொந்​த​மானவை, இருப்​பினும் மாநில வரு​வாய் மற்​றும் நிலச் சீர்​திருத்​தத் துறை​யிடம் எத்​தனை நீர்​நிலைகள் பகு​தி​யாகவோ அல்​லது முழு​மை​யாகவோ ஆக்​கிரமிக்​கப் ​பட்​டுள்ளன என்​பது பற்​றிய தகவல் இல்​லை. “நாங்​கள் நீர்​நிலை கணக்கெடுப்பு முடிவு​களை கவனித்து வரு​கிறோம், மேலும் ஆக்கிரமிப்பு இல்​லாத பொதுக் குளங்​கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்​கை​யைப் பெறு​வோம்” என்று அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.

85 % நீர்​நிலைகள் கிராமப்​புறங்​களில் இருப்​ப​தாக கணக்​கெடுப்பு காட்​டு​கிறது. பெரும்​பாலானவை (சு​மார் 91%) குளங்​கள், மற்​றவை ஏரி​கள், நீர்த்​ தேக்​கங்​கள், தடுப்​பணை​கள் மற்​றும் கசிவுநீர் குட்டைகள் ஆகும்.

பிஹார் மாநிலத்தில் 8,937 நீர்நிலைகள் காணவில்லை: ஜல் சக்தி அமைச்சக ஆய்வில் தகவல்
ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடல்’ எனும் அமெரிக்க வியூகமும் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in