2 குழந்தை விதி இனி தேவையா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

2 குழந்தை விதி இனி தேவையா? - உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on: 
1 min read

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்​தில் மங்​களா பீமாராவ் இங்ளே என்ற பெண் ஊராட்​சித் தலை​வ​ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மூன்​றாவது குழந்தை பிறந்ததால், ஊராட்​சிப் பத​வி​யில் இருக்​கக் கூடாது என்ற மாநில சட்​டத்​தின் அடிப்​படை​யில் அவர் தகுதிநீக்​கம் செய்​யப்​பட்​டார்.

இதை எதிர்த்த மனுவை விசா​ரித்த உச்சநீதிமன்ற நீதிப​தி​கள், 2003-ம் ஆண்​டில் சராசரியாக 3 குழந்​தைகள் என்றிருந்த நிலை, தற்​போது 1.9 ஆகக் குறைந்​துள்ள நிலை​யில், இரண்டு குழந்​தைகளுக்கு மேல் பெற்​றவர்​கள் தேர்​தலில் போட்​டி​யிடக் கூடாது என்ற கட்​டுப்​பாடு இனி தேவையா என்று கேள்வி எழுப்​பினர்.

2 குழந்தை விதி இனி தேவையா? - உச்ச நீதிமன்றம் கேள்வி
“கோவை பெரியார் அறிவுலகம் தப்பித்தது, ஏனெனில்...” மு.க.ஸ்டாலின் விவரிப்பு

X