ஈரான் - இஸ்ரேல் போரால் ம.பி. வாழை விவசாயிகள் பாதிப்பு

ஈரான் - இஸ்ரேல் போரால் ம.பி. வாழை விவசாயிகள் பாதிப்பு
Updated on
1 min read

பர்வானி: மத்தியப் பிரதேசம் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள பர்வானி மாவட்டத்தின் உயர்தர வாழைப் பழங்களுக்கு வளைகுடா நாடுகளில் பெரும் வரவேற்பு உண்டு.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்திற்கு முன்னதாக ஈரான், இராக், இஸ்ரேல், பஹ்ரைன், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு டன் கணக்கில் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது நிலவி வரும் போர்ச் சூழலால் ஏற்றுமதிச் சங்கிலி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையான வாழைப்பழம், தற்போது 8 முதல் 9 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இப்பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 200 டன்னுக்கும் மேல் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர்ச் சூழல் நமது கிராமப்புற பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போரால் ம.பி. வாழை விவசாயிகள் பாதிப்பு
கொச்சி துறைமுகத்தில் ஈரான் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in