துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து - முழு விவரம்

துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து - முழு விவரம்
Updated on
2 min read

புதுடெல்லி: பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமன சட்​டத்​துக்கு விதித்த இடைக்​கால தடை உத்​தரவை உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​தது.

தமிழக பல்​கலைக்​கழகங்களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும் மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட்​டதையடுத்​து, உச்ச நீதி​மன்​றமே தனக்குரிய அதி​காரத்​தைப் பயன்படுத்தி அந்த மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்கி சட்​ட​மாக்கியது. இதை எதிர்த்து பாளை​யங்கோட்​டையைச் சேர்ந்த பாஜக வழக்​கறிஞர் கே.வெங்​க​டாச்சலபதி சென்னை உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு,துணைவேந்​தர்​களை நியமிக்க இடைக்​கால தடை விதித்​தது.

இந்த தடையை நீக்​கக் கோரி​யும், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த விசா​ரணையை உச்ச நீதி​மன்​றத்​துக்கு மாற்​றக்கோரி​யும் தமிழக அரசு தரப்​பில்உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உச்ச நீதி​மன்​றம் தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்​தது.

தமிழக அரசு சார்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் பி.​வில்​சன், அபிஷேக்​மனு சிங்வி ஆஜராகி, துணைவேந்​தர் நியமன சட்​டத்தை எதிர்த்து மே 12-ம் தேதி தாக்​கல் செய்த பொதுநல மனுவை விசா​ரித்​து, இடைக்​கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்​றம், பதில் மனு தாக்​கல் செய்ய வாய்ப்​பளிக்​காமலேயே இடைக்​கால தடையை விதித்ததாக குறிப்​பிட்​டனர்.

அப்​போது தலைமை நீதிபதி இது உண்​மையா என்று கேட்​டதற்கு பதில் அளித்த எதிர்​மனு​தா​ரர் வழக்​கறிஞர் டிஎஸ் நாயுடு, இடைக்​கால​மாக மட்​டுமே தடைவிதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்தார். இடைக்​கால தடை விதிப்பதற்கு முன் வாதங்​களை முன்வைக்க அரசுக்கு வாய்ப்பு வழங்கப்​பட்​டதா என நீதிபதி கேட்​டார். இதற்கு பதில் அளித்த அபிஷேக் மனு சிங்​வி, தடை விதிக்கப்​பட்ட பிறகே வாதங்​கள் கேட்கப்​பட்​ட​தாக குறிப்​பிட்​டார். இதை டிஎஸ் நாயுடு மறுத்​தார்.

தமிழக அரசு வழக்கறிஞர் கூறும் போது, இந்த விவ​காரத்தை விடு​முறை கால அமர்வு விசா​ரிக்க முடி​யாது.உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருப்​பதை குறிப்​பிட்​டும் மைக்கை ஆப் செய்​து​விட்டு இடைக்​கால தடை உத்​தரவை பிறப்​பித்து அரசுக்கு எதி​ராக கருத்​துகளை​யும் உயர் நீதி​மன்ற நீதிபதி தெரி​வித்​தார்.

அப்​போது நீதிப​தி​கள், துணைவேந்​தர் நியமனம் தொடர்​பான விவ​காரம் நிலு​வை​யில் இருக்​கும்​போது விடு​முறை கால அமர்வு எப்​படி விசா​ரித்​தது, அது​வும் துணைவேந்​தர் நியமன சட்​டம் மாதிரி​யான அரசமைப்பு சார்ந்த விவ​காரங்​களை விசா​ரித்து இடைக்​கால தடையை விதித்​துள்​ளது. இந்த விவ​காரத்​தில் அவசரம் காட்ட வேண்​டிய தேவை எங்​கிருந்து வந்​தது. மேலும் சட்​ட​விரோத​மாக துணைவேந்​தர்​கள் நியமித்​தால் அதை உயர் நீதி​மன்​றம் தடுத்து இடைக்​கால தடை விதித்​திருக்க முடி​யுமே என்​றனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்​டபிறகு, துணைவேந்​தர் நியமன சட்​டத்​துக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் விதித்த இடைக்​கால தடையை ரத்து செய்​தது. மேலும் நிலு​வை​யில்​ உள்​ள இந்​த மனுவை 6 ​வாரங்​களுக்​குள்​ வி​சா​ரிக்​க​வும்​, இந்​த வழக்​கு தொடர்​​பாக ஏற்​கெனவே தெரி​வித்​த கருத்​துகளை கேட்​க​வும்​ உத்​தரவிட்​டது.

துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து - முழு விவரம்
“தேர்தலில் தோற்கப் போவதால் தமிழகத்துக்கு பாஜக நிதி ஒதுக்கவில்லை” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in