நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ‘ஐஎன்எஸ் மாங்ரோல்’ கடற்படை​யில் இணைப்பு

நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ‘ஐஎன்எஸ் மாங்ரோல்’ கடற்படை​யில் இணைப்பு
Updated on: 
1 min read

மும்பை: நீர்மூழ்கிக் கப்​பலை கண்​டறி​யும் ஐஎன்எஸ் மாங்ரோல் நேற்று மும்பை​யில் கடற்​படை​யில் முறைப்​படி இணைக்கப்பட்டது.

கொச்​சி​யில் உள்ள ‘கொச்​சின் ஷிப்​யார்ட் லிமிடெட்’ நிறுவனத்தால் கட்​டப்​பட்ட இந்​தக் கப்​பல், நீர்​மூழ்​கிக் கப்பல்களின் அச்​சுறுத்​தல்​களைக் கண்​டறிந்து அழிக்​க​வும், கடல் சார் ரோந்து விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் மற்​றும் பிற போர்க்​கப்​பல்களு​டன் இணைந்து இயங்​கும் திறனை​யும் கொண்​டது. மேலும் இது கடல் கண்​காணிப்பு, குறைந்த தீவிர கடல்​சார் நடவடிக்​கைகள் மற்​றும் கண்​ணிவெடி போர்ப் பயிற்​சிகளி​லும் ஈடு​படும் திறன் படைத்​தது.

துறை​முகங்​கள், கடலோரப் பகு​தி​கள் ஆகிய​வற்​றைப் பாதுகாப்பதுடன், கடற்​படை​யின் ஒட்​டுமொத்த செயல்பாடுகளுக்கும் இது உறு​துணை​யாக இருக்​கும்.

குஜராத்தின் ஜூனாகட் மாவட்​டத்​தில் உள்ள ஒரு கடலோர மீன்​பிடி நகரமான மாங்​ரோலை மைய​மாகக் கொண்டு இக்கப்பலுக்குப் பெயரிடப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே ஏப்​ரல் 2004 வரை இந்​திய கடற்​படை​யில் சேவை ஆற்​றிய ஐஎன்​எஸ் மாங்ரோல் கண்ணிவெடி அகற்றும் ‘மைன்​ஸ்​வீப்​பர்’ ரகப் போர்க்​கப்​பலின் பாரம்​பரி​யத்தை இந்​தப் புதிய கப்​பல் முன்​னெடுத்​துச் செல்​கிறது.

பழைய போர்க்​கப்​பல்​களின் பெயர்​களை​யும், பெரு​மை​யை​யும் அடுத்த தலை​முறை கப்​பல்​களுக்​குச் சூட்​டும் கடற்​படை​யின் பாரம்​பரி​யத்​தின்​படி இப்​பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. இப்​போர்க்​கப்​பல் 80 சதவீதத்​திற்​கும் அதி​க​மான உள்​நாட்​டுப் பொருட்​களால் கட்​டப்​பட்​டுள்​ளது. நவீன போர்க்​கப்​பல் வடிவ​மைப்​பு, கட்​டு​மானம் மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட ஆயுதங்​கள்​/சென்​சார்​களை ஒருங்​கிணைப்​ப​தில் இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் சுய​சார்​புத் திறனை இந்​த கப்​பல்​ வெளிப்படுத்துகிறது.

நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ‘ஐஎன்எஸ் மாங்ரோல்’ கடற்படை​யில் இணைப்பு
இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி: ராகுல், மம்தா, அகிலேஷ் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in