இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’ - டாக்டர் ரெட்டீஸுக்கு விநியோக உரிமை

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’ - டாக்டர் ரெட்டீஸுக்கு விநியோக உரிமை
Updated on
1 min read

புதுடெல்லி: டாக்​டர் ரெட்​டீஸ் லேபரேட்​டரீஸ், டாகேடா பார் மாசூட்​டிகல்ஸ் ஆகிய நிறு​வனங்​கள் கூட்​டாக இணைந்​து, இந்தியா​வின் முதல் டெங்கு தடுப்​பூசி​யான ‘கியூடெங்​கா’வை இந்தி​யா​வில் சந்​தைப்​படுத்​த​வும் விநி​யோகிக்​க​வும் ஒப்​பந்​தம் செய்​துள்​ள​தாக அறி​வித்​துள்​ளன.

இதுகுறித்து டாகேடா நிறு​வனத்​தின் சர்​வ​தேச சந்​தைப் பிரி​வின் தலை​வர் மகேந்​தர் நாயக் கூறுகை​யில், “கடந்த ஜூலை மாதம்​தான் சந்​தைப்​படுத்​து​வதற்​கான அனு​மதி எங்​களுக்​குக் கிடைத்தது. டாக்​டர் ரெட்​டீஸ் உடனான கூட்டு ஒப்​பந்​தத்​தின்​படி, அமலில் உள்ள ஒழுங்​கு​முறை விதி​களுக்கு உட்​பட்​டு, மருத்​துவ நிபுணர்​களை ஒருங்​கிணைத்​தல், சிறு​வர்​கள் மற்​றும் பெரிய​வர்​களுக்​கான தடுப்​பூசியை இந்​தி​யா​வின் தனி​யார் சந்​தை​யில் விளம்​பரம் செய்து விநி​யோகித்​தல் போன்ற பணி​களை இரு நிறுவனங்​களும் இணைந்து மேற்​கொள்​ளும்.

இந்​தி​யா​வின் பொதுத் தடுப்​பூசி திட்​டத்​தில் கியூடெங்கா டெங்கு தடுப்​பூசி​யைச் சேர்ப்​பதே நீண்​ட​கால இலக்​காகும்” என்​றார் அவர். நாட்​டின் தனி​யார் மருத்​து​வச் சந்​தை​யில் 2027-ம் ஆண்​டின் முதல் பாதி​யில் ‘கியூடெங்​கா’ தடுப்​பூசி இந்​தி​யா​வில் விற்​பனைக்கு வர வாய்ப்​புள்​ள​தாக நிறு​வனங்​கள் தெரி​வித்​துள்​ளன. அதேவேளை​யில், இத்​தடுப்​பூசி​யின் விலை இன்​னும் நிர்ணயிக்கப்பட​வில்​லை.

முன்​ன​தாக, 4 முதல் 60 வயது வரை உள்​ளவர்​களுக்கு இத்​தடுப்​பூசி​யைப் பயன்​படுத்த மத்​திய மருந்​துகள் தரக் கட்​டுப்​பாட்டு அமைப்பு கடந்த ஜூலை மாதம் சந்​தைப்​படுத்​தல் அனு​ம​தியை அளித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி ‘கியூடெங்கா’ - டாக்டர் ரெட்டீஸுக்கு விநியோக உரிமை
வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in