இந்தியத் தேர்தல் திருவிழா: சர்வதேச குழுவினர் பாராட்டு

இந்தியத் தேர்தல் திருவிழா: சர்வதேச குழுவினர் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: அசாம், கேரளா மற்​றும் புதுச்​சேரி​யில் கடந்த 9ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. இதை பார்வையிடுவதற்​காக 22 நாடு​களைச் சேர்ந்த சர்​வ​தேச குழுவினர் 38 பேர் வந்திருந்​தனர்.

இவர்​கள் அசாம், கேரளா மற்​றும் புதுச்​சேரி​யில் கடந்த 8 மற்​றும் 9 தேதி​களில், தேர்​தல் நடவடிக்​கைகளை பார்​வை​யிட்​டனர். தேர்தல் அதி​காரி​கள், காவல் துறை அதி​காரி​கள், வாக்​காளர்​கள் என அனைத்து தரப்​பினரை​யும் சந்​தித்து பேசினர். வாக்குச் சாவடிகளில் செய்​யப்​பட்​டுள்ள வசதி​களை​யும் அவர்​கள் பார்வையிட்​டனர்.

இது குறித்து நமீபி​யா​வில் இருந்து வந்​திருந்த பவுலஸ் ஷிக்​வேதா கூறுகை​யில், ”வாக்​குச் சாவடிகள் திட்​ட​மிட்டு அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சக்கர நாற்​காலி, குழந்தை பாதுகாப்பு வசதி​கள் செய்​யப்​பட்​டிருந்​தது மிக​வும் கவர்ந்​தது” என்றார்.

சியரா லியோனைச் சேர்ந்த அபுபக்​கர் மகமூத் கூறுகை​யில், ”இந்தி​யத் தேர்​தலில் கண்ட மிகச் சிறந்த விஷ​யம் எலக்ட்​ரானிக் ஓட்​டுப் பதிவு இயந்​திரம். இங்​குக் கண்ட பல விஷ​யங்​களை நாங்கள் எங்​கள் நாட்​டில் அமல்​படுத்த முயற்​சிப்​போம்” என்றார்.

இந்தியத் தேர்தல் திருவிழா: சர்வதேச குழுவினர் பாராட்டு
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in