இந்தியா
ஏழுமலையானை தரிசித்த பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்
திருப்பதி: கடந்த ஆண்டில் முதன்முறையாக நேபாளத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிருக்கான டி-20 உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணியினர், பயிற்சியாளர் வெங்கடேஷப்பா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ எம்.எல். ராஜு ஆகியோருடன் நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோயிலின் வெளியே இந்திய அணியின் கேப்டன் தீபிகா கூறும்போது, “முதன் முறையாக நடந்த பார்வையற்றோருக்கான போட்டியில் உலக கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளோம் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.
