வன்முறை எதிரொலி: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை நிறுத்தி வைப்பு!

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை நிறுத்தி வைப்பு!
Updated on
1 min read

சிட்டாகாங்: பிரபல இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையை அடுத்து, வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கத்தை அகற்றிய மாணவர் போராட்டங்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹாடி, பிப்ரவரி 12 அன்று நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளராக இருந்தார்.

மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​டிசம்பர் 12 அன்று முகமூடி அணிந்த மர்ம நபர்களால் அவர் தலையில் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 18ல் உயிரிழந்தார்.

அவரது மரணம் காரணமாக வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்தது. கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 18) அன்று சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரின் இல்லத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

அதேபோல, சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிட்டகாங்கில் இந்திய விசா விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விசா விண்ணப்ப மையம் வெளியிட்ட தகவல்களின் படி, சிட்டகாங்கில் உள்ள அனைத்து இந்திய விசா தொடர்பான சேவைகளும் டிசம்பர் 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும். பாதுகாப்பு நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகு, விசா விண்ணப்ப மையம் மீண்டும் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை நிறுத்தி வைப்பு!
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அபாரம் - மகாயுதி கூட்டணி முன்னிலை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in