அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா​வில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதர​வாளர்​களுக்கு மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடும் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தனது நூற்​றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்​சிகளை நடத்தி வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் அமெரிக்​கா​வின் நியூயார்க் நகரில் கடந்த சனிக்​கிழமை உரை​யாற்​றி​னார். அப்போது, மேடிசன் ஸ்கொயர் கார்​ட​னுக்கு வெளியே போராட்டத்தில் ஈடு​பட்​ட​வர்​கள் மற்​றும் காலிஸ்​தான் ஆதரவாளர்கள் இந்​திய தேசி​யக் கொடியை காலில் மிதித்​தும் கிழித்​தும் அவம​தித்​தனர்.

இதுதொடர்​பாக, மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அரசி​யல் ரீதி​யான கருத்து வேறு​பாடு​கள் இருப்​ப​தில் தவறில்​லை. ஆனால், நாட்டை அவம​திப்​பதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. ஆர்​எஸ்​எஸ், பாஜக அல்​லது அரசை விமர்​சிக்க முழு சுதந்​திரம் உள்​ளது. ஆனால், நமது நாட்டை அவம​திக்​கக் கூடாது.

இதை கவன​மாகக் கேட்​டுக் கொள்​ளுங்​கள். எனது தேசி​யக் கொடியை​யும், எனது நாட்​டை​யும் அவம​திக்​காதீர்​கள். மீறி​னால் அதற்​காக நீங்​கள் மிகப்​பெரிய விலை​யைக் கொடுக்க வேண்டியிருக்​கும்” என்று கூறி​யுள்​ளார். இதனுடன், தேசி​யக் கொடியை காலில் கட்​டிக்​கொண்டு ஒரு​வர் தனது காலை அசைக்கும் காட்​சிகள் அடங்​கிய காணொலியை​யும் அவர் பகிர்ந்துள்​ளார்.

அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை
நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in