பிரிக்ஸ் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திய இந்தியா: எகிப்து ஏஐ நிபுணர் அகமது புகழாரம்

பிரிக்ஸ் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திய இந்தியா: எகிப்து ஏஐ நிபுணர் அகமது புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா மிகவும் சிறப்பாக நடத்தியதாக எகிப்து நாட்டைச் சேர்ந்த ஏஐ நிபுணர் அகமது எல்ஷர்காவி பாராட்டி உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவின் தலைமைத்துவத்தை வெகுவாக பாராட்டினர். அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்ற எகிப்து நாட்டின் ஏஐ நிபுணரான அகமது எல்ஷர்காவி, இந்த மாபெரும் நிகழ்வைப் பாராட்டி பேசும்போது, ''பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தகைய அற்புதமான மற்றும் மிகவும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதில் இந்தியா ஒரு சிறந்த தலைவராக திகழ்கிறது.

பிரிக்ஸின் இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக இறையாண்மை செயற்கை நுண்ணறிவுத் திட்டம் ஆகியவற்றில் எவ்வாறு ஒத்துழைப்பது மற்றும் இணைந்து செயல்படுவது என்பது குறித்து விவாதிப்பதில் அதிக கவனம் செலுத்தியது" என்றார்.

பிரிக்ஸ் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திய இந்தியா: எகிப்து ஏஐ நிபுணர் அகமது புகழாரம்
உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in