இண்டியா கூட்டணி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது: உமர் அப்துல்லா கருத்து

இண்டியா கூட்டணி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது: உமர் அப்துல்லா கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: இண்​டியா கூட்​டணி அவசர சிகிச்சை பிரி​வில் உள்​ளது என காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா தெரி​வித்​துள்​ளார்.

தனி​யார் ஊடகம் சார்​பில் தலை​மைத்​து​வம் தொடர்​பான உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா பேசி​ய​தாவது: தேர்​தலின்​போது பாஜக வாக்கு திருட்​டில் ஈடு​படு​வ​தாக​வும் மின்​னணு வாக்கு இயந்​திரங்​களில் முறை​கேடு செய்து வெற்றி பெறு​வ​தாக​வும் சிலர் குற்​றம் சாட்​டு​கின்​றனர். இதில் எனக்கு உடன்​பாடு இல்​லை.

நாடு முழு​வதும் நடை​பெறும் தேர்​தல்​களில், தங்​கள் வாழ்க்​கையே இதில்​தான் உள்​ளது என்று கருதி பாஜக​வினர் தீவிரமாக பணி​யாற்​றுகின்​றனர். அதனால்​தான் அவர்​களால் வெற்றி பெற முடிகிறது. பிரதமரும், அவரது சகாக்​களும் தேர்​தலுக்​காக 24/7 உழைப்​பது போல எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் உழைப்​பது இல்​லை.

இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கிடையே ஒற்​றுமை இல்​லை. இக்​கூட்​டணி இப்​போது அவசர சிகிச்சை பிரி​வில் உள்​ளது. அதற்கு செயற்கை சுவாசம் பொருத்​தப்​பட்​டுள்​ளது. பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை எதிர்​கொள்ள இண்​டியா கூட்​டணி கட்​சிகள் ஒருங்​கிணைந்து முடிவு​களை எடுக்க வேண்​டும். இவ்​வாறு முதல்வர் உமர் அப்துல்லா​ தெரி​வித்​தார்​.

இண்டியா கூட்டணி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது: உமர் அப்துல்லா கருத்து
இண்டிகோ விமான சேவை ரத்து காரணமாக 37 ரயில்களில் 116 பெட்டிகளை கூடுதலாக இணைத்தது ரயில்வே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in