நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின கோலாகலம்: டெல்லியில் மோடி, சென்னையில் விஜய் கொடியேற்றினர்

ஒரு கோடி இளைஞர்​களுக்​கு ஏஐ வகுப்​பு, இலவச ஆன்​லைன் பயிற்சி அளிக்க பிரதமர் திட்டம்
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி. (அடுத்த படம்) தமிழகத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி. (அடுத்த படம்) தமிழகத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.

Updated on
2 min read

புதுடெல்லி/சென்னை: ​நாடு முழு​வதும் 80-வது சுதந்​திர தின விழா நேற்று கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது. டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் மோடி​யும் சென்னை கோட்​டை​யில் முதல்​வர் விஜய்​யும் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினர்.

நாட்​டின் 80-வது சுதந்​திர தினத்தை முன்​னிட்டு டெல்லி ராஜ்​காட்​டில் உள்ள மகாத்மா காந்தி நினை​விடத்​தில் பிரதமர் மோடி நேற்று மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர், டெல்லி செங்​கோட்​டை​யில் தொடர்ந்து 13-வது ஆண்​டாகப் பிரதமர் மோடி தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

தொடர்ந்து முப்​படை வீரர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை அவர் ஏற்​றுக் கொண்​டார். நாட்​டின் 80-வது சுதந்​திர தினம், வந்தே மாதரம் பாடலுடன் தொடங்​கியது. செங்​கோட்​டை​யில் கொடியேற்​றிய பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்​களிடையே உரை​யாற்​றி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: நாட்​டின் சுதந்​திரத்​துக்​காகப் போராடிய மகாத்மா காந்தி மற்​றும் அனைத்து சுதந்​திரப் போராட்ட வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​துகிறேன். இது ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நாள். சுதந்​திரத்​துக்​குப் பிறகு செங்​கோட்​டை​யின் கொத்​தளத்​தில் இருந்​து, ‘வந்தே மாதரம்’ பாடல் எதிரொலிக்​கும் தருணம் இது. புதிய தீர்​மானங்​களை ஏற்​றுக் கொண்டு தேசம் உற்​சாகத்​துட​னும் ஆர்​வ​முட​னும் முன்​னேறி வரு​கிறது.

வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடாக மாற வேண்​டும் என்ற பெரிய கனவை இந்​தியா கொண்​டுள்​ளது. உலகின் அதிக மக்​கள் தொகை கொண்ட நாடு, வளர்ந்த நாடாக மாறத் தீர்​மானிக்​கும் போது துணிச்​சலின் அடை​யாள​மாக அமை​கிறது.

கடந்த 12 ஆண்​டு​களில் பாது​காப்​புத்துறை உற்​பத்தி 4 மடங்​கும், கதர் மற்​றும் கிராமத் தொழில் துறை உற்​பத்தி 5 மடங்​கும், மின்​னணு சாதன உற்​பத்தி 7 மடங்​கும் அதி​கரித்​துள்​ளன. அலைபேசி உற்​பத்தி 33 சதவீத​மும், டிஜிட்​டல் பரிவர்த்​தனை 100 சதவீத​மும் வளர்ச்சி அடைந்​துள்​ளன.

சிறிய கனவு​கள் இனி நமக்​குப் போதாது. நாம் பெரிய கனவு​களைக் காண வேண்​டும். ஒரு காலத்​தில் பொருளா​தா​ரத்​தில் பலவீன​மான 5 நாடு​களில் ஒன்​றாகக் கருதப்​பட்ட இந்​தி​யா, இன்று உலகின் மிக வேக​மான வளரும் முக்​கிய பொருளா​தார நாடாக உரு​வெடுத்​துள்​ளது.

நவீன உள்​கட்​டமைப்பை உரு​வாக்க மெட்ரோ ரயில் வலைப்​பின்​னல்​களை விரிவுபடுத்​தினோம். பொதுப் போக்​கு​வரத்து அமைப்பை வலுப்​படுத்​தினோம். இந்த பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்ட வேகம் மற்​றும் அளவு ஆகியவை சுதந்​திரத்​துக்​குப் பிறகு முதல் முறை​யாக காணப்​பட்ட ஒரு மாற்​றத்தை பிர​திபலிக்​கின்​றன. இவை அனைத்​தும் கடந்த 10 ஆண்​டு​களுக்​குள் நிகழ்ந்​தவை.

இந்​தியா இனி மற்ற நாடு​களைச் சார்ந்​திருக்​கக் கூடாது. நாம் சுய​சார்பு கொண்​ட​வர்​களாக மாற வேண்​டும் என்​பதே எங்​கள் உறு​தி​யான நம்​பிக்​கை​யாக உள்​ளது.

வளர்ந்த நாடு உரு​வாக வேண்​டும் என்​றால் நமது நாட்டு இளைஞர்​களுக்​குப்போதிய பயிற்சி வழங்​கப்பட வேண்​டும். ஒரு கோடி இளைஞர்​களுக்​குச் செயற்கை நுண்​ணறிவு பயிற்சி (ஏஐ) வகுப்​பு​கள், போட்டித்தேர்​வு​களுக்​குத் தயாராக இலவச ஆன்​லைன் பயிற்சி அளிக்கப்​படும்.

கிராமங்​கள் மற்​றும் நகரங்​களில் உள்ள 5 முதல் 15 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளிடம் உள்ள விளை​யாட்​டுத் திறன்​களைக் கண்​டறிந்து அவர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக, நாடு தழு​விய அளவி​லான விளை​யாட்​டுத் திறன் தேடல் திட்​டம் தொடங்​கப்​படும். இதன் மூலம் இளம் வயதிலேயே அவர்​களது விளை​யாட்​டுத் திறன்​களைக் கண்​டறிவ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

‘சப்த தாரா’ - சுதந்​திர தின உரை​யின் போது பிரதமர் மோடி 7 அம்​சங்​களை வரையறுத்​தார். அவற்றை அவர் ‘சப்​த​ தா​ரா’ என்று அழைத்​தார். முதல் அம்​ச​மாக உற்​பத்​தித் துறை​யும், 2-வது அம்​ச​மாக விவ​சா​யத் துறை மேம்​பாடும், 3-வது அம்​ச​மாகத் தரவு மையங்​கள், ரோபோட்​டிக்ஸ் போன்ற தொழில்​நுட்​பம், புத்​தாக்​கம், யுபிஐ ஆகிய​வை​யும், 4-வது அம்​ச​மாகக் கதி சக்தி எனப்​படும் நாட்டை அனைத்​துப் பகு​தி​களில் இருந்து இணைக்கும் திட்​டங்​களை​யும், 5-வது பாது​காப்​புத் துறை​யில் தற்​சார்​பை​யும், 6-வது அம்​ச​மாகப் பசுமை மற்​றும் நீலப் பொருளா​தார வளர்ச்​சி​யை​யும், 7-வது அம்​ச​மாக யோகா, கைவினைப் பொருட்​கள், திரைப்​படங்​கள், அனிமேஷன், கேமிங், டிஜிட்​டல் உள்​ளடக்​கம், படைப்​பாற்​றல் உலகம் ஆகியவை அடங்​கிய ‘மென் சக்​தி’ திட்​டங்​களை​யும் ‘சப்த தாரா’ என்று பிரதமர் தனது பேச்​சில் குறிப்​பிட்​டார்.

தமிழகத்​தில்​... தமிழகத் தலைநகர் சென்​னை, புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் அமைந்​துள்ள 119 அடி உயர கொடிக் கம்​பத்​தில், முதல்​வ​ராக விஜய் முதல் முறை​யாக தேசி​யக் கொடியேற்றி வைத்​தார்.

காலை 8.33 மணிக்கு கோட்டை வந்​தடைந்த முதல்​வர் விஜய்​யை, தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் வரவேற்​றார். அதன்​பின்​னர், தென்​னிந்​திய பகு​தி​களின் தலை​மைப் படைத் தலை​வர் லெப்​டின்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி, தமிழகம் மற்​றும் புதுச்​சேரி கடற்​படை அதி​காரி ரியர் அட்​மிரல் உபல் குண்​டு, ஏர் கமோடர் தபன் சர்​மா, கடலோரக் காவல் படை இன்​ஸ்​பெக்​டர் ஜெனரல் யோகிந்​தர் தாகா, தமிழக டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால், கூடு​தல் டிஜிபி டி.எஸ்​.அன்​பு, சென்னை காவல் ஆணை​யர் அ.அமல்​ராஜ் ஆகியோரைத் தலை​மைச் செயலர் சாய்​கு​மார் முதல்​வருக்கு அறி​முகம் செய்து வைத்​தார்.

தொடர்ந்து தமிழக மற்​றும் கேரள காவல் துறை​யினர் நடத்​திய அணிவகுப்​பு மரி​யாதையைத்​ திறந்​த ஜீப்​பில்​ அவர்​ பார்​வை​யிட்​டார்​. அதன்​பிறகு 8.45 மணிக்​குக்​ கோட்​டை கொத்​தளத்​தில்​ தேசி​யக்​ கொடியை முதல்​வர்​ ​விஜய்​ ஏற்​றி வைத்​து மரி​யாதை செலுத்​தி​னார்​.

<div class="paragraphs"><p>நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி. (அடுத்த படம்) தமிழகத்தில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்.</p></div>
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in