பார்லிமென்ட் சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

பார்லிமென்ட் சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
Updated on: 
1 min read

புதுடெல்லி: மக்​களவை தொகுதி மறுவரையறை மசோதா தொடர்​பாக காங்கிரஸ் கட்​சி​யின் உயர்​நிலைக் கூட்​டம் டெல்லியில் நேற்று நடை​பெற்​றது.

நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்​டத் தொடரில் மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம் மற்​றும் மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்பான மசோதாக்​கள் தாக்​கல் செய்​யப்​பட உள்​ளன. கடந்த ஏப்​ரலில் இதே மசோதாக்​கள் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்யப்​பட்டபோது அதை எதிர்த்து காங்​கிரஸ் உட்​பட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் ஒன்​றிணைந்து வாக்​களித்​தன.

இத​னால் மசோதாக்​களை நிறைவேற்ற முடிய​வில்லை. மேற்​கு​வங்க சட்​டப்​பேரவைத் தேர்​தலுக்​குப் பிறகு திரிணமூல் காங்​கிரஸ் உடைந்து, அதன் பெரும்​பாலான எம்​பிக்​கள் பாஜக கூட்​ட​ணிக்கு மாறி உள்​ளனர். இதேபோல தமிழக சட்​டப்​பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இண்​டியா கூட்​ட​ணி​யில் இருந்து திமுக வெளியேறி உள்​ளது. இத​னால் நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்​திருக்​கிறது.

இந்த சூழலில் தொகுதி மறு​வரையறை மசோதா தொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் டெல்லி வீட்​டில் அந்த கட்​சி​யின் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடைபெற்றது. இதில் கட்​சித் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, பொதுச்​செயலா​ளர்​கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி உட்​பட மூத்த தலை​வர்​கள் பங்​கேற்​றனர். இந்த கூட்​டத்​தில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்​கடிப்​பது குறித்து முக்​கிய ஆலோ​சனைகள் நடத்​தப்​பட்​டன.

இண்​டியா கூட்​டணி கூட்​டம்

இதனிடையே மக்​களவை மற்​றும் மாநிலங்​களவையை சேர்ந்த காங்​கிரஸ் எம்​பிக்​கள் அனைவரும் நாடாளு​மன்ற சிறப்பு கூட்டத்தில் பங்​கேற்க வேண்​டும் என்று அந்த கட்சி சார்​பில் கொறடா உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்டு உள்​ளது. வரும் 29-ம் தேதிக்குள் காங்​கிரஸ் எம்​பிக்​கள் அனைவரும் டெல்​லி​யில் இருக்க வேண்​டும் என்று கட்சி தலைமை அறி​வுறுத்தி உள்​ளது. டெல்​லி​யில் இன்று இண்டியா கூட்​டணி கட்​சிகளின் உயர்​நிலைக் கூட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்டு உள்​ளது.

காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்​கேவின் டெல்லி வீட்​டில் இன்று காலை 11.30 மணிக்கு கூட்​டம் தொடங்​கு​கிறது. இதில் இண்டியா கூட்​ட​ணி​யில் இடம் பெறாத திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் உள்​ளிட்ட கட்​சிகளும் பங்​கேற்க அழைப்பு விடுக்கப்பட்​டிருக்​கிறது. சரத்​பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி, இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கிறது. ஆனால் இன்று நடை​பெறும் கூட்​டத்தை சரத் பவார் கட்சி புறக்​கணிக்​கும் என்று தகவல்​கள் வெளியாகி உள்​ளன.

பார்லிமென்ட் சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபி உட்பட 13 பேருக்கு நோட்டீஸ்

X