மேற்கு வங்க பள்ளிகளில் பயோமெட்ரிக் அமல்

மேற்கு வங்க பள்ளிகளில் பயோமெட்ரிக் அமல்
Updated on: 
1 min read

கொல்கத்தா: மேற்குவங்க அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் தீபக் பர்மான் கூறியதாவது: மேற்குவங்கம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 69,000 தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம் அமல் செய்யப்படும். தற்போது சோதனை அடிப்படையில் 150 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டம் அமல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க பள்ளிகளில் பயோமெட்ரிக் அமல்
மோடியின் 'மேக் இன் இந்தியா'வுக்குப் புதின் புகழாரம்: 16 வயது இந்திய ஏஐ தொழில்முனைவோருக்கும் பாராட்டு

X