

புதுடெல்லி: அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில்சுபாஷ் சந்திர கபூருக்கு கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவரது தண்டனை காலம் கடந்த 2022 அக்டோபரில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து தண்டனை காலம் தாண்டி சிறையில் வைத்துள்ள தன்னை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுபாஷ் கபூர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டதுஇதை எதிர்த்து விஜயநாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு, தமிழக அரசு, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை, சுபாஷ் கபூர் ஆகியோர்பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் சுபாஷ் கபூரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.