“எங்கள் குற்றச்சாட்டை குடியரசுத் தலைவர் மறுப்பார் என்று எதிர்பார்த்தேன்; ஆனால்…” - ராகுல் அதிர்ச்சி

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த இந்தியா கூட்டணி கட்சியினர்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த இந்தியா கூட்டணி கட்சியினர்

Updated on: 
2 min read

புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தில் எங்கள் குற்றச்சாட்டை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மறுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அது தனக்கு அதிர்ச்சியும், திகைப்பும் தந்ததாக அவர் கூறியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் இண்டியா கூட்டணி கட்சியினர், இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:

“தேசத்தில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று குடியரசுத் தலைவர் மறுப்பார் என நான் எதிர்பார்த்தேன். இந்தியாவில் நியாயமான முறையில், சுதந்திரமாக தேர்தல் நடைபெறுகிறது என்று சொல்வார் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால், நாங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டார். அது எனக்கு அதிர்ச்சியும், திகைப்பும் தந்தது.

எங்கள் தரப்பில் நாங்கள் அவரிடம் மனு அளித்தோம். தேசத்தில் ஜனநாயகத்தை அழிக்கும் செயலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்துள்ளனர் என்று அதில் தெரிவித்தோம். அதை குடியரசுத் தலைவர் மறுக்கவோ, கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ இல்லை. அது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டார்.

தேர்தல் திருட்டு என்பது தேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் அறிந்தது. ஒவ்வொரு மாநிலமாக இது நடந்துள்ளது. 2024 பொதுத்தேர்தலில் கூட இந்த தேர்தல் திருட்டு வேலை நடந்துள்ளது. இருப்பினும் குடியரசுத் தலைவர் ஆதாரம் கேட்கிறார். ஆதாரத்தை அவர் ஏற்க தயார் என்றால் அதை நாங்கள் சமர்ப்பிக்க தயார்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட்டாக இணைந்து சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் ராஜிவ் ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

>> தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்.

>> எஸ்ஐஆர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து சட்ட விரோதமாக நீக்கப்பட்ட 13.30 கோடி வாக்காளர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்.

>> கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.

<div class="paragraphs"><p>குடியரசுத் தலைவர்&nbsp;திரவுபதி முர்முவை சந்தித்த இந்தியா கூட்டணி கட்சியினர்</p></div>
மதுராந்தகம், தாராபுரம் முடிவுகளும், தவெக வெற்றியும் ‘சொல்வது’ என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in