பெங்களூருவில் மனைவி உள்ளிட்ட 7 பேரைக் கொன்ற நபர் கைது

பெங்களூருவில் மனைவி உள்ளிட்ட 7 பேரைக் கொன்ற நபர் கைது
Updated on: 
1 min read

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்த வாடகை கார் ஓட்​டுநர் இந்​துசேகர் (52), குடும்​பத் தக​ராறில் மனைவி சுனிதா (40) மற்றும் அவரது குடும்​பத்​தினர் 6 பேரைக் கொடூர​மாகக் கொலை செய்த சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

2006-ல் திரு​மணம் செய்த இவர்​களுக்​கிடையே அடிக்​கடி சண்டை நடந்​துள்​ளது. சுனிதாவின் தாயும் சகோ​தரர்​கள் உள்​ளிட்ட அனைவரும் குடும்ப விவகாரங்​களில் தலை​யிட்​ட​தால் இந்​துசேகர் கோபமடைந்​துள்​ளார். அக்​டோபர் 16-ம் தேதி சுனிதாவை ஆட்​டுக்​கல்​லால் அடித்​துக் கொன்று, உடலை நகருக்கு வெளியே வீசி​யுள்​ளார். பின்​னர் மைத்​துனர்​கள் சிவகுமார் (42), சங்​கர் (36) ஆகியோ​ருக்கு மது​வுடன் கறி விருந்​து வைத்து, உரலால் அடித்​துக் கொன்​றார்.

அவர்​களின் மனைவி​கள் திவ்யா (36), நளினி (32), மாமியார் ரூபாவதி (65), 7 வயது சிறு​வன் புனீத் ஆகியோரை​யும் கொலை செய்து, உடல்​களை சார்​மாடி, நந்தி மலைப் பகுதி​களில் வீசியுள்ளார். உறவினர்​கள் அடுத்​தடுத்து காணா​மல் போனதால், நளி​னியின் தாய் லட்​சுமி ஸ்ரீராம்​புரா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்தார்.

செல்​போன் அழைப்​பு​களை ஆய்வு செய்த போலீ​ஸார், இந்துசேகரைப் பிடித்து 24 மணி நேரம் விசா​ரித்​தனர். அவர் குற்றத்தை ஒப்​புக்கொண்​டார். நந்தி மலையில் சிறு​வனின் உடல் மீட்​கப்​பட்​டது. மற்ற உடல்களை மோப்ப நாய், ட்​ரோன் உதவியுடன் தேடி வருகின்​றனர். கொலைக்​குப் பயன்​படுத்​திய கார், ஆட்​டுக்​கல், ஆயுதங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

பெங்களூருவில் மனைவி உள்ளிட்ட 7 பேரைக் கொன்ற நபர் கைது
ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு புகார்: துரைமுருகன் உட்பட 28 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

X