

புதுடெல்லி: பிரதமருடன் நாடாளுமன்றத்தில்தான் விவாதம் நடத்த வேண்டும் என்று ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சிலர் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயல்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல், “நீங்கள்தான் வெளிநாட்டு உதவியால் பிரதமர் ஆனீர்கள், அவர்களின் தயவால்தான் ஆட்சியில் நீடிக்கிறீர்கள். இதுகுறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” என சவால் விடுத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா,‘‘நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வாருங்கள். தெருக்களில் அல்ல. போஃபர்ஸ் விவகாரம் முதல் போபால் எரிவாயு துயரம் வரை, விவாதிப்பதற்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன,’’ என்று தெரிவித்துள்ளார்.