பெங்களூருவில் இந்தி பெயர்ப்பலகை சேதம்: கன்னட அமைப்பினர் 20 பேர் மீது வழக்குப் பதிவு

பெங்களூருவில் இந்தி பெயர்ப்பலகை சேதம்: கன்னட அமைப்பினர் 20 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் இந்தி பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்​களூரு​வில் மத்​திய அரசுக்​குச் சொந்​த​மான பாரத் எலக்ட்​ரானிக்ஸ் நிறு​வனம் இயங்​கும் பகு​தி​யில் உள்ள சதுக்​கத்​தில் அந்த நிறு​வனத்​தின் பெயர்ப் பலகை இந்தி மொழி​யில் பொறிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த கன்னட ரக் ஷண வேதிகே அமைப்​பினர், அப் பலகையை அகற்​று​மாறு கடந்த வாரம் பி.இ.எல். நிறுவன மேலா​ளரிடம் கோரிக்கை வைத்​தனர்.

இந்​தக் கோரிக்​கையை பி.இ.எல். நிறு​வனம் நிராகரித்​ததை அடுத்து, நேற்று கன்னட ரக்‌ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் அந்த இடத்​திற்​குச் சென்​று, இந்தி பெயர்ப் பலகையை உடைத்​தனர். மேலும், இந்தி திணிப்​புக்​கும் மத்​திய அரசுக்​கும் எதி​ராக முழக்​கமிட்​டனர்.

இந்​நிலை​யில், இந்தி பெயர்ப் பலகையை உடைத்த கன்னட அமைப்​பினர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யு​மாறு பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங், வித்​யாரண்​யபுரா போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டார். இதைத் தொடர்ந்​து, கன்னட ரக் ஷண வேதிகே அமைப்​பைச் சேர்ந்த 20 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்துள்​ளனர்​.

பெங்களூருவில் இந்தி பெயர்ப்பலகை சேதம்: கன்னட அமைப்பினர் 20 பேர் மீது வழக்குப் பதிவு
இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுத்த காங்கோ: தொடரில் இருந்து வெளியேறியது | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in