அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஹிமந்த பிஸ்வா

அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஹிமந்த பிஸ்வா
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் பழங்குடியினத்தவர் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பிஹார் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பழங்குடியினத்தவர்கள் கோரி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், ரபா, மைசிங், திவா ஆகிய 3 பழங்குடியினத்தவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பதாக அமித் ஷா உறுதி அளித்தார். இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஹிமந்த பிஸ்வா
முன்னாள் பிரதமர் மன்மோகன் முதல் நினைவு தினம் அனுசரிப்பு: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in