கோப்புப்படம்

கோப்புப்படம்

20 ஆண்டுக்கு பிறகு உள்துறை பாஜக வசமான நிலையில் பிஹாரில் சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி

Published on

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​டணி அமோக வெற்றி பெற்​றது.

கடந்த 20-ம் தேதி ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார் 10-வது முறை​யாக முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அவரோடு 2 துணை முதல்​வர்​கள் உட்பட 26 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்​றனர். அவர்​களுக்​கான இலா​காக்​கள் நேற்று முன்​தினம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டன.

அப்​போது துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான சாம்​ராட் சவுத்​ரிக்கு உள்​துறை ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. முதல்​வர் நிதிஷ் குமார் சுமார் 20 ஆண்​டு​கள் உள்​ துறையை தனது வசம் வைத்​திருந்​தார். முதல்​முறை​யாக பாஜக​வுக்கு உள்​துறை ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டிருக்​கிறது. இது பிஹார் அரசி​யலில் முக்​கிய திருப்பு முனை​யாகக் கருதப்​படு​கிறது.

இந்த சூழலில் பிஹார் சட்​டப்​பேரவை சபா​நாயகர் பதவிக்கு பாஜக, ஐக்​கிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி நில​வு​கிறது. பாஜக தரப்​பில் முன்​னாள் அமைச்​சர் பிரேம் குமார் முன்​னிறுத்​தப்​படு​கிறார். இதே​போல ஐக்​கிய ஜனதா தளம் சார்​பில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் தாமோதர் ராவத் சபா​நாயகர் பதவிக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டிருக்​கிறார். இரு தரப்​பிலும் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
“நிதிஷ் அரசுக்கு ஆதரவு அளிக்க தயார், ஆனால்…” - ஒவைசி நிபந்தனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in