“ஆம் ஆத்மி சரியான திசையில் சென்றிருந்தால்...” - 7 எம்பிக்கள் விலகல் பற்றி ஹசாரே கருத்து

“ஆம் ஆத்மி சரியான திசையில் சென்றிருந்தால்...” - 7 எம்பிக்கள் விலகல் பற்றி ஹசாரே கருத்து
Updated on
2 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சரியான திசையில் சென்றிருந்தால் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 எம்பிக்கள் கட்சியை விட்டு விலகி இருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் அஹில்யா நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “ஜனநாயகத்தில் அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு. அவர்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து கட்சித் தலைமை (அரவிந்த் கேஜ்ரிவால்) ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அவர்கள் ஏதோ சிரமத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

கட்சித் தலைமையின் தவறுதான் இதற்குக் காரணம். கட்சி சரியான திசையில் சென்றிருந்தால் அவர்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள். கட்சியை விட்டு விலகும் அவர்களின் முடிவுக்குப் பின்னால் உள்ளார்ந்த காரணங்கள் இருக்கும்.

அந்தக் காரணங்களை பரந்த ஜனநாயக சூழலின் பின்னணியில் பார்க்க வேண்டும். எங்கிருந்து வெளியேற வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2011ம் ஆண்டில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்போது அன்னா ஹசாரேவும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டனர். டெல்லியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் ஹசாரேவுடன் கேஜ்ரிவால் இணைந்து செயல்பட்டார். எனினும், கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய அன்னா ஹசாரே, தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்.

பின்னணி என்ன?

ஆம் ஆத்மி கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வர் ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள், அக்​கட்​சி​யில் இருந்து விலகி நேற்று பாஜக​வில் இணைந்​தனர்.

முன்னதாக டெல்லியில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய ராகவ் சத்தா, “ஆம் ஆத்மி கட்​சி​யின் மாநிலங்​களவை எம்.பி.க்​களில் மூன்​றில் 2 பங்​கினர் பாஜக​வில் இணைய முடிவு செய்​துள்​ளோம். என்​னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலி​வால், ஹர்​பஜன் சிங், சந்​தீப் பதக், அசோக் மிட்​டல், ராஜேந்தர் குப்​தா, விக்​ரம் சாஹ்னி என மொத்​தம் 7 எம்.பி.க்​கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளி​யேறி உள்ளோம்.

எனது வாழ்​வின் 15 ஆண்​டு​களை ஆம் ஆத்மி கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக அர்ப்​பணித்​தேன். ஆனால், நேர்​மை​யான அரசி​யலை முன்​னிறுத்தி தொடங்​கப்​பட்ட இந்த இயக்​கம், தற்​போது அந்த பாதை​யில் இருந்து வில​கி​விட்​டது.

நியாய​மான மனித​னாகிய நான் தவறான, நேர்மை இல்லாத ஒரு கட்​சி​யில் இருந்​ததை இப்​போது உணர்கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்​சி​யில் இருந்து விலகி மக்​களுக்​காகப் பணி​யாற்ற முடி​வெடுத்​துள்​ளேன்” என தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

“ஆம் ஆத்மி சரியான திசையில் சென்றிருந்தால்...” - 7 எம்பிக்கள் விலகல் பற்றி ஹசாரே கருத்து
காலியாகும் கூடாரம்... ‘ஆம் ஆத்மி’யில் நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in