‘ஃப்ளை துபாய்’ பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு

‘ஃப்ளை துபாய்’ பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு
Updated on: 
1 min read

காந்திநகர்: இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது அபாரமான துணிச்சலை வெளிப்படுத்தி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தின் விமானியான ஸ்மித் மச்சாரின் துணிச்சல் இன்று உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும் 174 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற அவர் காட்டிய அசாதாரண துணிச்சல் ஊக்கமளிப்பதாகவும் பாராட்டக்கூடியதாகவும் உள்ளது.

குஜராத்தின் இந்த வீர மகன் தனது வீரத்தின் மூலம் குஜராத் மற்றும் நாட்டின் பெயரை உலகம் முழுவதும் ஒளிரச் செய்துள்ளார். அவர் நம்புகளில் ஓடும் குஜராத்திய உணர்வு நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது.

அவரது அசாதாரணமான துணிச்சல் மற்றம் மனிதாபிமானச் செயலை பாராட்டும் வகையில் குஜராத் அரசு அவருக்கு 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' (Vishisht Gujarat Garima Puraskar) விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.

அவர் விரைவில் குணமடைய குஜராத் முழுவதும் பிரார்த்னைகள் நடைபெற்று வருகின்றன. முதல் ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், மிருத்யுஞ்சய மந்திர ஜப வழிபாடும் நடைபெற்று வருகிறது. இதில், குஜராத் மக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரின் கூட்டுப் பிரார்த்தனைகளும் இணைந்துள்ளன.

தேவாதி தேவனான சோமநாத பெருமானிடம், நமது வீர நாயகனான ஸ்மித் மச்சாருக்கு விரைவான ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளுமாறு பிரார்த்திக்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

விமான ஸ்மித் மச்சார் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரது குடும்பத்தினர் நீண்ட காலத்துக்கு முன்பே மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘ஃப்ளை துபாய்’ பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல்வர் அறிவிப்பு
‘ஃப்ளை துபாய்’ விமான சம்பவ பின்னணி குறித்த விசாரணைக்கு யுஏஇ உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in