ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்துக்கு அனுமதி

ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்துக்கு அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: அந்​த​மான் நிகோ​பார் தீவு​களில் செயல்​படுத்​தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்​பிலான ‘கிரேட் நிகோ​பார்’ திட்​டத்​திற்கு தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் (என்​ஜிடி) ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. இந்த திட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட மனுக்​களை என்​ஜிடி தள்​ளு​படி செய்​தது.

சுற்​றுச்​சூழல் ஆர்​வல​ரான ஆஷிஷ் கோத்​தாரி என்​பவர் கிரேட் நிகோ​பார் திட்​டத்​துக்கு எதி​ராக என்​ஜிடி​யில் வழக்கு தொடர்ந்​தார். அவர் தாக்​கல் மனு​வில், இத்​திட்​டம் 2019-ம் ஆண்​டின் தீவு கடலோர ஒழுங்​கு​முறை மண்டல (ஐசிஆர்​இசட்) விதி​களை மீறு​வ​தாகக் குற்​றம் சாட்​டி​யிருந்​தார். குறிப்​பாக, 700 ஹெக்​டேர் பரப்​பளவி​லான கட்​டு​மானங்​கள், வளர்ச்​சிப் பணி​களுக்​குத் தடை விதிக்​கப்​பட்ட பகு​தி​களில் வரு​வ​தாக அவர் குற்​றம் சாட்​டி​யிருந்​தார்.

இந்த நிலை​யில், தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தலை​வர் நீதிபதி பிர​காஷ் வத்​சவா தலை​மையி​லான ஆறு பேர் கொண்ட சிறப்பு அமர்வு அந்த திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்கி அதற்கு எதி​ரான மனுக்​களை தள்​ளு​படி செய்து உத்​தரவு பிறப்​பித்​தது. இத்​திட்​டத்​திற்கு வழங்​கப்​பட்ட சுற்​றுச்​சூழல் அனு​ம​தி​யில் போது​மான பாது​காப்பு நடவடிக்​கைகள் இருப்​ப​தாக​வும், எனவே இதில் தலை​யிடத் தகுந்த காரணங்​கள் இல்லை என்​றும் என்​ஜிடி கூறி​யுள்​ளது.

மேலும், சுற்​றுச்​சூழல் அனு​ம​தி​யில் குறிப்​பிடப்​பட்​டுள்ள நிபந்​தனை​களை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களும், ஒழுங்​கு​முறை முகமை​களும் முழு​மை​யாக​வும், கண்​டிப்​புட​னும் பின்​பற்ற வேண்​டும் என்று தீர்ப்​பா​யம் தனது உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளது.

கிரேட் நிகோ​பார் திட்ட மதிப்பு ரூ.80,000 கோடி ஆகும். இத்​திட்​டம் 166 சதுர கிலோ மீட்​டரில் (இதில் 130 சதுர கி.மீ. வனப் பகு​தி​யும் அடக்​கம்) செயல்​படுத்​தப்பட உள்​ளது. சரக்கு பெட்டக மாற்று முனை​யம், ஒருங்​கிணைந்த நகரம், ராணுவ மற்​றும் சிவில் பயன்​பாட்​டிற்​கான விமான நிலை​யம், 450எம்​விஏ எரி​வாயு மற்​றும் சூரியசக்தி மின் உற்​பத்தி நிலை​யம் ஆகிய​வற்றை இத்​திட்​டம்​ உள்​ளடக்​கியுள்​ளது.

ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்துக்கு அனுமதி
10-ம் வகுப்பு தேர்வை தவிர்த்துவிட்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in