

புதுடெல்லி: நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் இரண்டாவது கட்டத்தில் மக்களிடம் சாதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தியது வரை சுமார் 40 கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டு பட்டியல், வீட்டுவசதிக் குறித்த கணக்கெடுப்புப் பணி 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த முதல் கட்டப் பணி 2026 செப்டம்பருக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசிதழில் 2026 ஆகஸ்ட் 3 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி, கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனி படர்ந்த பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்ராகண்ட் மாநிலங்களில் பனி படர்ந்த பகுதிகளில் 2026 செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.
அதைத் தொடர்ந்து 2026 அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை மறு ஆய்வு சுற்று நடைபெறும். அத்துடன் 2026 ஆகஸ்ட் 15 முதல் 31-ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு வசதியும் அளிக்கப்படும் என்ற தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அண்மையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் தொகுதி கணக்கெடுப்பு பணியின் இரண்டாம் கட்டத்தில் மக்களிடம் கேட்கப்பட உள்ள 40 கேள்விகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த கேள்விகள் என்னென்ன?
பெயர்
குடும்பத் தலைவர் உடனான உறவு
பாலினம்
பிறந்த தேதி மற்றும் வயது
திருமணம் ஆனவரா?
திருமணத்தின் போது வயது என்ன?
துணைவரின் பெயர்
குடியுரிமை
மதம்
பட்டியல் இனத்தவர் / பட்டியல் பழங்குடியினர் / சாதி
தந்தையின் விவரம்
தாயாரின் விவரம்
மாற்றுத்திறனாளி
தாய்மொழி மற்றும் அறிந்த மொழிகள் என்னென்ன?
எழுத்தறிவு நிலை
கல்வி நிறுவனத்தின் வருகை விவரம்
அதிகபட்ச கல்வி
தொழில்
பொருளாதார நிலை
வணிகம் அல்லது சேவை துறை
பணியாளர் வகை
பணிக்காக பயணித்த இடம்
பிறந்த இடம்
கடைசியாக வசித்த இடம்
இடப்பெயர்வுக்கான காரணம்
நிரந்தர குடியிருப்பு முகவரி
பிள்ளைகளின் விவரம்
கரோனா தடுப்பூசி செலுத்திய இடம்
எத்தனை வங்கி கணக்குகள் உள்ளது?
மொபைல் எண்
ஆதார் எண்
வாக்காளர் அடையாள அட்டை எண்
பாஸ்போர்ட் எண் (கடவுச்சீட்டு)
ஓட்டுநர் உரிம விவரம்