டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சீமாபுரியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த மாதம் தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மதியம் 3 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடு அது. தகவல் கிடைத்தும் தேசிய பேரிடர் மீட்பு படை, காவல் துறை, தீயணைப்பு படையினரிடம் தெரிவித்தோம்.

முதற்கட்ட தகவலின் படி அருகில் இருந்த கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி நடந்துள்ளது. அதன் தாக்கம் இடிந்து விழுந்த கட்டிடத்தை வலுவிழக்க செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று வடகிழக்கு டெல்லியின் மாவட்ட நீதித்துறை நடுவர் அஜய் குமார் தெரிவித்தார்.

இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகே மேலும் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாக களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து அன்று இரவே இடிந்து விழுந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கட்டிடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததாக டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு
Vivo S2 FE ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in