தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மையத்துக்கு அடிக்கல்: அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு

தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மையத்துக்கு அடிக்கல்: அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
Updated on
1 min read

அமராவதி: நாட்​டிலேயே முதன் முறை​யாக தேசிய குவான்டம் கம்ப்​யூட்​டர் மைய கட்​டிடத்​திற்கு நேற்று அமராவ​தி​யில் மத்​திய அமைச்​சர் ஜிதேந்தர சிங் அடிக்​கல் நாட்​டி​னார். இதில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மற்​றும் மத்​திய அமைச்​சர்​கள், மாநில அமைச்​சர்​கள் பலர் பங்​கேற்​றனர்.

ஆந்​திர மாநில தலைநகர் அமராவ​தி​யில் நேற்று மாலை ‘அம​ராவதி குவான்டம் வாலி’ மைய கட்​டிடத்​திற்க்கு மத்​திய தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் ஜி​தேந்​தர் சிங், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் கூட்​டாக அடிக்​கல் நாட்​டினர்.

அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், நாட்​டின் தொழில்​நுட்ப எதிர்​காலத்​திற்கு ஒரு புதிய அத்​தி​யாத்தை தொடங்கி வைக்​கும் வித​மாக தற்​போது அமராவதி குவான்டம் வாலி​யின் கட்​டிடத்​திற்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது.

50 ஏக்கர் நிலத்தில்... - உலக குவான்டம் தொழில்​நுட்​பத்​திற்கு ஆந்​தி​ராவை முன்​னிலை படுத்​தும் நிகழ்​வாக இது உள்​ளது. இதன் மூலம் தேசிய குவான்டம் புரட்​சிக்கு ஆந்​திர மாநிலம் பிள்​ளை​யார் சுழி போட்​டுள்​ளது. இதற்​காக ஆந்​திர அரசு அமராவதி தூளூரு பகு​தி​யில் 50 ஏக்​கர் நிலம் ஒதுக்​கீடு செய்​துள்​ளது. நாட்​டின் முதல் 133 க்யூபிட் குவான்டம் கம்ப்​யூட்​டரை அமராவ​திக்கு கொண்டு வர ஐபிஎம், டிசிஎஸ், எல் அண்ட் டி போன்ற நிறு​வனங்​கள் முக்​கிய நிறு​வனங்​களாக உள்​ளன.

குவான்டம் கம்ப்​யூட்​டிங், குவான்டம் தகவல் தொழில்​நுட்​பம், குவான்டம் சென்​சார், ஏஐ தொழில்​நுட்​பம், சைபர் செக்​யூரிட்​டி, ராணுவம், மருத்​து​வம், கல்​வி, நிதித்​துறை உள்​ளிட்ட முக்​கிய துறை​களின் பரிசோதனை​கள், தொடக்​கங்​கள், வளர்ச்சி பணி திட்ட பரிசோதனை​கள் இனி இங்கு நடக்​கும்.

குவான்டம் வாலி அமைவ​தன் மூலம் உலகளா​விய பரிசோதனை மையங்​கள், க்ளோபல் தொழில்​நுட்ப முதலீடு​கள், ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்​டம் விரி​வாக்​கம், பல லட்​சம் இளைஞர்​களுக்கு தொழில்​நுட்ப பயிற்ச்​சிகள், வேலை வாய்ப்​பு​கள் கிடைக்​கும். வரும் ஆகஸ்ட் மாதம் இறு​திக்​குள் குவான்டம் மைய கட்​டிட பணி​கள் நிறைவடை​யும்.

டிசம்பருக்குள்… - டிசம்​பர் மாத இறு​திக்​குள் குவான்டம் கம்ப்​யூட்​டரை இங்கு நிறுவ வேண்​டும் என ஆந்​திர அரசு லட்​சி​ய​மாக கொண்​டுள்​ளது. அமெரிக்​கா​வில் உள்ள போஸ்​டன், சிங்​கப்​பூர், ஷாங்​காய் நகரங்​களுக்கு ஈடாக இனி இந்​தி​யா​வில் ஆந்​திர மாநிலத்​தில் குவான்டம் வாலி இயங்​கும் என்​ப​தில்​ பெரு​மை கொள்​கிறேன்​ என சந்​திர​பாபு ​நா​யுடு பேசி​னார்​.

தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மையத்துக்கு அடிக்கல்: அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
துபாய் நகைக் கடை பகுதியில் உலகின் முதல் தங்கச் சாலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in