பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவா நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் சரண்

கோவா நீதிமன்றத்தில் சரணடைந்த தருண் தேஜ்பால்

கோவா நீதிமன்றத்தில் சரணடைந்த தருண் தேஜ்பால்

Updated on
1 min read

புதுடெல்லி: உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்​த​ குற்றச்சாட்டில் ‘தெஹல்கா’ முன்​னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கள் கிழமை) அவர் கோவா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த 2013-ல் உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்​த​தாக, ‘தெஹல்கா’ முன்​னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவாவில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்​கில், போதிய ஆதா​ரங்​கள் இல்லை எனக் கூறி தருண் தேஜ்​பாலை கடந்த 2021-ம் ஆண்டு விசா​ரணை நீதி​மன்​றம் விடு​வித்​தது.

இதை எதிர்த்​துத் தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதி​மன்​றம், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தருண் தேஜ்​பாலுக்கு 10 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை​யும் அபராத​மும் விதித்​துத் தீர்ப்​பளித்​தது. இந்​தத் தீர்ப்பை எதிர்த்து தருண் தேஜ்பால் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்கல் செய்​ததோடு, தான் சரணடைவ​தில் இருந்து விலக்கு கோரி இடைக்​கால மனு ஒன்​றை​யும் தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுக்​கள், உச்ச நீதி​மன்ற நீதிபதி அலோக் ஆராதே தலைமையி​லான அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, சரணடைவ​தில் இருந்து விலக்கு கோரி தருண் தேஜ்பால் தாக்​கல் செய்​திருந்த மனுவை நீதிப​தி​கள் நிராகரித்தனர்.

மேலும், அவர் 2 வாரங்​களில் சரணடைய வேண்டும் என்​றும் அதற்கான சான்​றிதழைத் தாக்​கல் செய்த பின்னரே, உயர் நீதிமன்​றத்​தால் வழங்​கப்​பட்ட தண்​டனைக்கு எதிரான மேல்​முறை​யீட்டு மனு வி​சா​ரணைக்கு எடுத்​துக்​கொள்ளப்​படும் என்றும்​ நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

இதன் காரணமாக, தருண் தேஜ்பால் கோவா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். இதையடுத்து வடக்கு கோவாவில் உள்ள கொல்வேலி மத்திய சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

தருண் தேஜ்பால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

<div class="paragraphs"><p>கோவா நீதிமன்றத்தில் சரணடைந்த தருண் தேஜ்பால் </p></div>
"17 என்சிபிஐ எம்.பிக்கள் பாஜகவில் இணையவுள்ளனர்" - திரிணமூல் அதிருப்தி எம்.பி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in