

கோப்புப்படம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
இம்பால் மேற்கு மாவட்டத்தில் 20-ம் தேதி நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, அந்த அமைப்பைச் சேர்ந்த சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்ட்டன. அதே நாளில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிரெபக் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர்கள் 4 பேர் மீதும் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுபோல, தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடருந்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.