சித்தராமையாவுக்கு எதிராக ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ தயாரித்த பெண் நிர்வாகி நீக்கம்

கர்​நாடக முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா

கர்​நாடக முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா

Updated on: 
1 min read

பெங்களூரு: கர்​நாடக முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா பெண்​கள் சிலருடன் பேசுவது போன்ற வீடியோ கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இது குறித்து காவல் ஆணை​யரிடம் சித்தராமையா புகார் அளித்​தார்.

அதன்பேரில் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், காங்​கிரஸ் பெண் நிர்​வாகி கிருபா ஆல்வா, தனியார் சேனல் தலை​வர் ராகேஷ் ஷெட்டி உள்​ளிட்​டோரிடம் விசா​ரணை நடத்​தினர். டெல்​லியைச் சேர்ந்த யூடியூபர் ரித்​தேஷ் பாண்டே கைது செய்​யப்​பட்​டார்.

பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த்​குமார் சிங், அந்த வீடியோ ஏஐ தொழில்​நுட்​பத்​தால் உரு​வாக்​கப்​பட்ட போலியானது என்​றும், சித்​த​ராமையாவின் நற்​பெயரைக் கெடுக்க முயற்சி நடந்​த​தாகவும் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், கட்சி விரோத செயலில் ஈடு​பட்​ட​தாக கிருபா ஆல்வா காங்​கிரஸி​லிருந்து 6 ஆண்​டுகளுக்கு நீக்​கப்​பட்​டுள்​ளார். விளக்​கம் கேட்டு அனுப்​பிய நோட்​டீஸுக்கு கிருபா ஆல்வா பதிலளிக்​க​வில்லை என்​றும், அவர் திட்​ட​மிட்டு வீடியோ தயாரித்​தது போலீஸ் விசா​ரணை​யில் உறுதி​யானதால் நீக்​கப்​பட்​ட​தாகவும் கர்​நாடக காங்​கிரஸ் தலை​வர் பி.கே.ஹரி​பிரசாத் கூறினார்.

சித்​த​ராமையாவின் மக​னும் அமைச்​சரு​மான யதீந்​திரா, தந்தை முதல்​வ​ராக இருந்​த​போது கிருபா ஆல்​வாவுக்கு புத்​தூர் தொகுதி​யில் சீட் மறுக்​கப்​பட்​ட​தால் பழிவாங்​கவே வீடியோவை உரு​வாக்​கிய​தாக குற்​றம்​சாட்​டினார்.

<div class="paragraphs"><p>கர்​நாடக முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா</p></div>
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாதிரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

X