

புதுடெல்லி: ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயரில் மாற்றம், பயோ மெட்ரிக் தகவல்களை புதுப்பித்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உதய் இணையதளத்தில் ஆதார் சேவை தொடர்பான கேள்விகள், சந்தேகங்களுக்கு எளிதில் பதில் கிடைக்க புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
உதய் இணையளத்தில் ‘ஆஸ்க் உதய்’ என்ற பெயரில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேள்விகளை கேட்டு பதில் பெறலாம். இதற்கான சின்னத்தை வடிவமைக்கும் போட்டியில், 875 பேர் பங்கேற்றனர். இதில், திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் முதல் பரிசு வென்றார்.
புனேவைச் சேர்ந்த இத்ரிஸ் டவாய்வாலா, காஜிப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணா சர்மா ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசை வென்றனர். இந்த சின்னத்துக்கு பெயர் வைக்கும் போட்டியில் போபாலைச் சேர்ந்த ரியா ஜெயின் முதல் பரிசை வென்றார்.