“என்னை கைது செய்தாலும் போராட்டத்தை நிறுத்தக் கூடாது” - சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே

Updated on: 
1 min read

புதுடெல்லி: தன்னை கைது செய்தாலும் அக்.10 டெல்லி போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்று கரப்பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை (அக்.10) போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் (சிஜேபி), சிபிஐ (எம்எல்)-ன் மாணவர் அமைப்பான ஏஐஎஸ்ஏ-வும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்த முயல்பவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

இந்த சூழலில் சிஜேபி நிறுவனம் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “நாளை (சனிக்கிழமை) காலை நான் டெல்லி வருகிறேன். அதையடுத்து என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. என்னை கைது செய்வது குறித்து நான் அச்சம் கொள்ளவில்லை. நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாம் போராடுகிறோம். அது எஸ்ஐஆர் நடவடிக்கையை திரும்ப பெறாமலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாமலும் நடைபெறாது.

நான் கைது செய்யப்பட்டாலும் போராட்டத்தை நிறுத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இது இந்தியாவின் அரசியலமைப்புக்கான போராட்டம். சட்டத்துக்கு உட்பட்ட, பொறுப்புமிக்க, அமைதியை விரும்பும் குடிமக்கள் நாம். இந்த பேரணி அமைதியான முறையில் நடைபெற வேண்டும். மகாத்மா காந்தியின் வழியில் நாம் பயணிக்கிறோம். இந்த போராட்டம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். அதற்கான பொறுப்பு நம்மிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே</p></div>
250 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிய மேற்கு இந்தியத் தீவுகள்: இந்தியாவை வீழ்த்தியது | 2-வது டி20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in