ஆந்திர வனப்பகுதியில் என்கவுன்ட்டர்: நக்சலைட் கமாண்டர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

ஆந்திர வனப்பகுதியில் என்கவுன்ட்டர்: நக்சலைட் கமாண்டர் உட்பட 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

விஜயவாடா: ஆந்​திர வனப்​பகு​தி​யில் பாது​காப்பு படை​யினர் நடத்​திய என்​க​வுன்ட்​டரில் நக்​சலைட் கமாண்​டர் ஹிட்மா உட்பட 6 பேர் கொல்​லப்​பட்​டனர். ஆந்​தி​ரா​வின் 5 மாவட்​டங்​களில் வீடு எடுத்து தங்​கி​யிருந்த 31 மாவோ​யிஸ்ட்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் அகற்ற மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதனால் சத்​தீஸ்​கர், ம.பி., தெலங்​கா​னா, ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​களில் வனப் பகு​தி​களில் இருந்து செயல்​படும் நக்​சலைட்​களை தேடும் பணி தீவிரம் அடைந்​துள்​ளது.

இதனால் வனப்​பகு​தி​களில் பதுங்கி இருந்த நக்​சலைட்​கள் அரு​கில் உள்ள நகர்ப்​புறங்​களுக்கு ஊடுரு​வி, தொழிலா​ளர்​கள் என்ற பெயரில் வீடு எடுத்து தங்​கத் தொடங்கி உள்​ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் ஆந்​தி​ரா​வில் விஜய​வா​டா, குண்​டூர், ஏலூரு, காக்​கி​நா​டா, விஜயநகரம் ஆகிய 5 மாவட்​டங்​களில் நேற்று ஒரே நேரத்​தில் உளவுத்​துறை மற்​றும் ஆயுதப்​படை போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இதில் 31 நக்​சலைட்​களை கைது செய்​தனர்.

இவர்​களில் விஜய​வாடா நகரில் மட்​டும் 27 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இங்​குள்ள புதிய ஆட்டோ நகரில் உள்ள ஒரு குடி​யிருப்பு பகு​தி​யில் 5-வது மாடி​யில் நக்​சலைட்​கள் தங்​கி​யிருப்​ப​தாக கிடைத்த தகவலின் பேரில் அங்​குள்ள வீடு​களை ஆயுதப் படை​யினர் காலி செய்ய வைத்​தனர். மேலும் அப்​பகுதி கடைகளை மூட வைத்​து, அந்த குடி​யிருப்பு பகு​தியை சுற்றி வளைத்​தனர். இதையடுத்து 5-வது மாடி​யில் 3 வீடு​களில் வாடகைக்கு தங்கி இருந்த 12 பெண்​கள் உள்​ளிட்ட 27 நக்​சலைட்​களை கைது செய்​தனர். இவர்​களு​டன் தங்​கி​யிருந்த மலேசிய நாட்டை சேர்ந்​தவர் ஒரு​வரும் கைது செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து ஆந்​திர உளவுத்​துறை ஏடிஜிபி மஹேஷ் சந்​திரா லட்டா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இங்கு மாரேடுமல்லி வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​கள் பதுங்கி இருப்​ப​தாக வந்த ரகசிய தகவலின்​படி உளவுத் துறை மற்​றும் ஆயுதப்​படை போலீ​ஸார் அவர்​களை 2 நாட்​களாக தேடி வந்​தனர்.

செவ்​வாய்க்​கிழமை காலை​யில் பாது​காப்பு படை​யினர் - நக்​சலைட்​கள் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் 17 ஆண்​டு​களாக தேடப்​பட்டு வந்த மாவோ​யிஸ்ட் கமாண்​டர் ஹிட்மா உள்​ளிட்ட 6 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். சத்​தீஸ்​கர் மாநிலம், சுக்மா மாவட்​டத்தை சேர்ந்த ஹிட்மா பற்​றிய தகவலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்​கப்​படும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவர் மீது பல வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவர் கொரில்லா சண்​டை​யில் கைதேர்ந்​தவர். கொல்​லப்​பட்​ட​வர்​களில் ராஜி எனும் பெண் மவோ​யிஸ்​டும் அடங்​கு​வார்.

இது​போல் சத்​தீஸ்​கர் மாநி லம், எர்​ர​போரு வனப்​பகு​தி​யில் நடந்த என்​க​வுன்ட்​டரில் மேலும் ஒரு நக்​சலைட் கொல்​லப்​பட்​டார். இதனால் ஒரே நாளில் 7 நக்​ச லைட்​கள்​ கொல்​லப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in