

சண்டிகர்: பஞ்சாபின் லூதியானா மாவட்டம், பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர் சமன் லால் (72). கடந்த 11-ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு குடும்பத்தினரு்டன் சென்றார்.
நீண்டகாலமாக சமன் லால் ஞாபக மறதி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அமிர்தசரஸ் பயணத்தி்ல் எதிர்பாராதவிதமாக அவர் குடும்பத்தி னரை விட்டு பிரிந்தார். அவரிடம் மொபைல்போனும் கிடையாது. இதனால் அவரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.
ஞாபக மறதி காரணமாக வழிதெரியாத சமன் லால் ரயில் ஏறி பிஹாரின் கயா பகுதிக்குச் சென்றார். சுமார் 1,200 கி.மீ.க்கு அப்பால் அவர் தனது குடும்பத்தை தேடி அலைந்தார். சில நாட்களுக்கு முன்பு கயாவை சேர்ந்த இளைஞர் நீரஜிடம் சமன்லால் உணவு் கேட்டார். முதியவரின் பரிதாப நிலையை அறிந்த நீரஜ், அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார்.
பஞ்சாபி மொழி மட்டுமே பேசிய சமன் லால் தனது கிராமத்தின் பெயரை (பதேகர் குஜ்ரன்) மட்டும் கூறினார். அந்த கிராமம் எங்கிருக்கிறது என்று சாட்ஜிபிடி மூலம் நீரஜ் தேடி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் இருப்பதை கண்டுபிடித்தார்.
சமன்லாலை தனியாக அனுப்ப முடியாது என்பதால் அவரும் பஞ்சாபுக்கு புறப்பட்டு, சமன் லாலின் குடும்பத்தினரை கண்டுபிடித்தார். குடும்பத்தினர் மட்டுமன்றி ஒட்டுமொத்த கிராம மக்களும் சமன்லாலை உற்சாகமாக வரவேற்று இளைஞர் நீரஜுக்கு நன்றி தெரிவித்தனர்.