பிஹார் மாநிலத்தில் 8 சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டன

பிஹார் மாநிலத்தில் 8 சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டன
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்​தின் ஜாமுயி மாவட்​டத்​தில் லகா​பான் மற்​றும் சிமுல்​தாலா ரயில் நிலை​யங்​களுக்கு இடையே சரக்கு ரயி​லின் 8 பெட்​டிகள் நேற்று முன்​தினம் இரவு 11.25 மணிக்கு தடம்புரண்​டன.

இதனால் 20-க்​கும் மேற்​பட்ட ரயில் சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன. தடம்​புரண்ட பெட்​டிகளை அகற்​றும் பணி, போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கிறது.

இந்த விபத்து காரண​மாக இந்த வழித்​தடத்​தில் செல்​லும் பல எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. பல ரயில்​கள் தன்​பாத் - கயா வழித்​தடத்​தில்​ திருப்​பி விடப்​பட்​டன.

பிஹார் மாநிலத்தில் 8 சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டன
டெல்லியில் 7 நைஜீரியர்கள் பிடிபட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in