கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

கொல்கத்தா: வங்​கதேசத்​தின் நர்​சிங்டி என்ற பகு​தி​யில் நேற்று காலை 10.08 மணி​யள​வில் பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அளவில் 5.7 புள்​ளி​களாக பதி​வாகியது.

இதன் அதிர்​வு​கள் மேற்​கு​வங்​கத்​தின் பல மாவட்​டங்​களில் உணரப்​பட்​டது. கொல்​கத்​தா​வில் தீவிர நிலநடுக்கம் ஏற்​பட்டு கட்​டிடங்​கள் 30 வினாடிகள் குலுங்​கியதாக ஒரு​வர் எக்ஸ் தளத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

மற்​றொரு​வர், ‘‘தனது வாழ்​வில் சந்​தித்த மிக தீவிர நிலநடுக்​கம் என்​றும், கொல்​கத்தா நகரம் பிளாஸ்​டிக் குகை​போல் குலுங்​கிய​து’’ என்றும் குறிப்​பிட்​டுள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in