பெங்களூருவில் ரூ.21.5 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்: 3 வெளிநாட்டினர் உட்பட 15 பேர் கைது

பெங்களூருவில் ரூ.21.5 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்: 3 வெளிநாட்டினர் உட்பட 15 பேர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்​களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து அம்​ருதஹள்​ளி, ஹெப்​பகுடி,ஜே.பி.நகர், கே.ஜி.ஹள்ளி உள்​ளிட்ட இடங்​களில் போதைப்​பொருள் கடத்​தலைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

அதில் 9.46 கிலோ ஹைட்ரோ கஞ்​சா, 34 கிலோ கஞ்​சா, 5.67 கிலோ எம்​டிஎம்ஏ, 131 கிராம் கோகைன், 29 எல்​எஸ்டி மாத்​திரைகள், 27 கிராம் எல்​எஸ்டி கட்​டிகள், 462 மில்லி ஹாஷிஷ் எண்​ணெய் உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் சிக்​கின.

கடத்​தல்​காரர்​களிடம் இருந்து 2 கார், 3 இரு சக்கர வாக​னம், 6 செல்​போன்​கள், ரூ.24 ஆயிரத்து 500 ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. கடத்​தலில் ஈடு​பட்ட 15 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அதில் 3 பேர் வெளிநாட்டினர். 15 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவு​களின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது. பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப் பொருட்​க‌ளின் சந்தை மதிப்பு ரூ.21.5 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

முதற்​கட்ட விசா​ரணை​யில், கல்​லூரி மாணவர்​கள் மற்​றும் தகவல் தொழில்​நுட்ப ஊழியர்​களுக்கு விற்​பனை செய்​வதற்​காக வெளி​நாட்​டில் இருந்து இவற்றை வாங்​கிய​து தெரியவந்துள்ளது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in